பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} +8 பெரிய புராண விளக் கம்-5

லுடைய ஒருமை பன்மை மயக்கம். மனம் போல்-திருவுள் ளங்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். அவர்-அந்தச் சான்றோர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அணிந்த-பூசிக் கொண்ட, சேமம்-பாதுகாப்பு. நிலவு-நிலாவும்; பொருந்தி இருக்கும். திருநீற்றின்-விபூதியினுடைய சிறந்த - சிறப்பு அமைந்த. வெண்மை-வெள்ளை நிறமாகிய, த்: சந்தி. திருந்து-திருத்தமாக உள்ள. ஒளியால்-பிரகாசத்தால். &lfi?TLI}.... நடுச்சாமத்தில் உள்ள. இருளும்-இருட்டும் வெளி ஆக்கும்பகலாக மாறச் செய்யும். இரவே-இராத்தி வேளையே. அல்ல-அல்லாமல். விரை-நறுமணம் கமழும், மலர்மேல்-மலர் களின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். காமர்-விருப்பம் மருவிய, மது-தேனை. உண்-குடிக்கும். சிறை-சிறகுகளைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். வண்டும்-வண்டுகளும்: ஒருமை பன்மை மயக்கம், களங்கம்-அழுக்கு. இன்றி-இல்லா மல். விளங்கும்-திகழும். ஆல்: ஈற்றசை நிலை. - பின்பு உள்ள 3 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

தமக்குப் படக் கிடைக்கும் சங்கீதத்தை ஆராய்ந்து முரலும் வண்டுகள் அரும்புகளை உடைய மெல்லிய மரங் களின் கிளைகளின் பக்கத்தில் அலைந்து திரியவும், சிவந்த நிறத்தைப் பெற்ற இனிய சுவையைக் கொண்ட தேனைச் சொரிபவை நறுமணம் வீசும் மலர்களின் வாய்களே அல்ல; குளிர்ச்சியைப் பெற்றது என்று கூறும் பூம்பொழிலில் எந்தப் பக்கங்களிலும் பறந்து வந்து சேரும் படப்பத்தையும் மென் மையையும் பெற்றநாகணவாய்ப் புட்களினுடைய பண் களைப் போன்ற பாடல்களைப் பாடும் அழகிய வாய்களும் தேவாரத் திருப்பதிகங்களில் உள்ள செழுமையான தேனைப் போன்ற பாசுரங்களை மழையைப் போலச் சொரி யும். பாடல் வருமாறு:

கண்ணும் இசைதேர் மதுகரங்கள் கனைமென் சினையின்

மருங்கலைய வண்ண மதுரத் தேன்பொழிவ வாச மலர்வா யேஅல்ல