பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெரிய புராண விளக்கம்-5.

பன்மை மயக்கம். முதல்வர்-முதல்வராகிய சிவபெருமானார். அவர்வழி-அந்தத் தாயனாரிடத்தில். வந்த-அமைந்திருந்த. செல்வம்-செல்வத்தை. அறியாமை-அந்த நாயனார் தெரிந்து கொள்ளாதபடி மாற்றினார்-போகச் செய்தருளி, GöffTf了。

சிவபெருமானாரை வேத முதல்வர் என்று குறிப்பிடும் இடங்களை முன்பே வேறோரிடத்தில் கூறினோம். ஆண்டுக் கண்டுணர்க. -

அடுத்து வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: “தம்மிடம் அமைந்திருந்த செல்வம் யானை நோயால் வெறுமையாக்கப்பட்ட விளாம்பழம் என்ன ஆகுமோ அத்தகைய நிலை தமக்கு உண்டாகி அழிந்து போகவும் பக்தியினால் பிரதிமையைப் போன்ற உமாதேவியைத் தம். வாம பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் சிவபெருமா னாருக்குத் தாம் முன்னால் செய்து பழகிய அந்தக் கேடு இல்லாத செயலிலிருந்து தாயனார் அகல்வதை இல்லாத வராக விளங்கினார். பாடல் வருமாறு:

" மேவு செல்வம் களிறுண் விளங்கனி, ஆவ தாகி அழியவும் அன்பினால் பாவை பங்கர்க்கு முன்பு பயின்றஅத் தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.' மேவு-தம்மிடம் அமைந்திருந்த செல்வம்-நிதியம். களிறு-யானை நோயால்; ஆகுபெயர். உண்-வெறுமை யாக்கப்பட்ட விளங்கனிவிளாம்பழம். ஆவது-அடைகிற, நிலை, ஆகி-தமக்கு உண்டாகி. அழியவும்-அழிந்து போக வும். அன்பினால்-பக்தியினால். பாவை-பிரதிமையைப் போன்ற உமாதேவியை, பங்கர்க்கு-தம்முடைய வாடி பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் சிவபெருமானா ருக்கு. முன்பு:வறுமை தம்மை அடைவதற்கு முன்னால், பயின்ற-செய்து புழகிய, அத்தா-அந்தக் கெடுதல் இல்இல்லாத கடைக்குறை. செய்கை-செயலிலிருந்து.