பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரிய புராண 36rఉ60–8

காட்டு முறுவல் நிலவலரக் கனகவரையிற் பன்னக நாண் பூட்டும் ஒருவர் திருமுடிமேற் புனைய லாகும் மலர்

தெரிந்து.' இந்தப் பாடல் குளகம். கோட்டு-மரங்களின் கிளை களில்; ஒரு மை பன்மை மயக்கம். மலரும்-மலர்ந்த பவள மல் லிகை மலர், வில்வ மலர், விளா மலர். வேங்கை மலர், வாகை மலர், மகிழ மலர், கடம்ப மலர் முதலிய மலர்களை யும்; ஒருமை பன்மை மயக்கம். நில-தரையில் வளர்ந்து நிற்கும் செடிகளிலும் கொடிகளிலும்; ஆகு பெயர். மலரும்மலர்ந்திருக்கும் நந்தியாவட்டை மலர், முல்லை மலர். மல்லிகை மலர், இருவாட்சி மலர் முதலிய மலர்களையும்: ஒருமை பன்மை மயக்கம், குளிர்-குளிர்ந்த, நீர்-குளம், பொய்கை முதலிய நீர் நிலைகளில்; ஆகுபெயர். மலரும்மலர்ந்திருக்கும் நீலோற்பல மலர், குமுத மலர், அல்லி மலர், வெண்டாமரை மலர், செந்தாமரை மலர், ஆம்பல் மலர், செங்கழுநீர் மலர் முதலிய மலர்களையும்; ஒருமை பன்மை மயக்கம். கொழும்.கொழுமையைப் பெற்ற, கொடியின்கொடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். தோட்டு-பல இதழ். களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். மலரும்- முல்லை மலர் முதலிய மலர்களையும்; ஒருமை பன்மை மயக்கம். மாமாமரத்தில் மலர்ந்த மலரும்-மலர்களையும்; ஒருமை பன்மை மயக்கம். சுருதி-இருக்கு வேதம், யஜுர் வேதம்: சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை யும்; ஒருமை பன்மை மயக்கம். மலரும் வெளிப்படுத்தும். திரு-அழகிய. வாயில்-வாயைப் போல. சிவபெருமான் வேதங் களை வெளியிட்டார் என்ற கருத்தைப் புலப்ப்டுத்தும் இடங் களை முன்பே ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. காட்டு - காட்டில் மலர்ந்திருக்கும். மு று வ ல் - மு. ல் ைல மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். நிலவு-சந்திரன் வீசும் நிலாவைப் போல. அலர-மலர. க்: சந்தி, கனக வரையில்பொன் மலையாகிய மேருமலை என்னும் வில்லில், ல் ைக