பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முருக நாயனார் புராணம் 157.

பாம்பாகிய, நாண்-நாணை. பூட்டும்-பூட்டி எய்யும். ஒருவர்ஒப்பற்றவராகிய அக்கினிசுவரருடைய, திரு-அழகிய முடி மேல்-தலையின் மீது. புனையலாகும்-அணிவதற்கு உரியவை ஆகும். மலர்- மலர்களை ஒருமை பன்மை மயக்கம். இவை தாழம்பூவைத் தவிர்த்து மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், தும்பை மலர், கரந்தை மலர், வெட்சி மலர், பவள மல்லிகை மலர், நீலோற்பல மலர், வில்வ மலர், மகிழ மலர், கடம்ப மலர் முதலியவை. தெரிந்து-ஆராய்ந்து.

பிறகு வரும் 9-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு முருக நாயனார் ஆராய்ந்து கொய்து கொண்டு வந்து மலர்களைத் தனியான ஒரிடத்தில் தாம் அமர்ந்து கொண்டு கோத்து அமைக்கும் கோவைகளையும், இண்டை மலர்களைக் கட்டும் மாலைகளோடு இணைத்துக் கட்டும் நறுமணம் வீசும் வேறு மாலைகளையும், தடிகளில் வைத்துக் கட்டும் தலை மாலைகளையும், காம்புகளை இணைத்துக் கட்டும் மாலைகளையும், நுட்பமான மகரந்தப் பொடிகளைப் பரப்பும் மாலைகளையும் அமைத்து வைத்துப் பூணுால் அசையும் திருமார்பைப் பெற்ற அந்த நாயனார்." பாடல் வருமாறு:

கொண்டு வந்து தனியிடத்தில் இருந்து கோக்கும்

கோவைகளும் இண்டைச் சுருக்கும் தாமமுடன் இணைக்கும் வாச

- - மாலைகளும். தண்டிற் கட்டும் கண்ணிகளும் தாளிற் பிணைக்கும்

பிணையல்களும் நுண்டா திறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு.

- - நூல்மார்பர்.' இந்தப் பாடலும் குளகம். கொண்டு வந்து-அவ்வாறு, முருக நாயனார் ஆராய்ந்து கொண்டு வந்து. தனியிடத்தில்அந்த மலர்களைத் தனியான ஓரிடத்தில், இருந்து-அமர்ந்து: