பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரிய புராண விளக்கம்-5

கொண்டு. கோக்கும்-கோத்து அமைக்கும். கோவைகளும்கோவைகளையும். இண்டை-இண்டை மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சுருக்கும்-கட்டும். தாமமுடன்மாலைகளோடு; ஒருமை பன்மை மயக்கம். இணைக்கும்இணைத்துக் கட்டும். வாச-நறுமணம் கமழும். மாலைகளும்வேறு மாலைகளையும். தண்டில்-தடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். கட்டும்-வைத்துக் கட்டும். கண்ணிகளும்-தலை மாலைகளையும். தாளில்-காம்புகளை ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். பிணைக்கும். இணைத்துக் கட்டும் . பிணையல்களும்-மாலைகளையும். நுண்-நுட்பமான, தாதுமகரந்தப் பொடிகளை; ஒருமை பன்மை மயக்கம். இறைக்கும் . பரப்பும். தொடையல்களும்-தொடுத்த மாலைகளையும். சமைத்து-அமைத்து வைத்து. நுடங்கு-அசையும். நூல்ஆணுலை. மார்பர்-அணிந்த மார்பைப் பெற்றவராகிய அந்த நாயனார். இந்தப் பாடலில் கோவைகள், தாமம், மாலை கள், பிணையல்கள், தொடையல்கள் என்று ஒரே பொருளில் வரும் பல சொற்களை அமைத்துள்ளார் சேக்கிழார். இஃது ஒர் அலங்காரம். -

பிறகு உள்ள 10-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "அந்தத் திருப்புகலூரில் உள்ள ஆலயத்தில் அந்தத் திருப் பணிகளாக உள்ளவற்றுக்கு அமைத் திருக்கும் காலங்களில் அந்தத் திருப்பணிகளை அமையச் செய்து, திருப்பணிகளுக் குரிய மலர்கள், கற்பூரத் தட்டு, தூபக்கால், கற்பூரம், சாம் பிராணி, அடிக்கும் மணி, நிவேதனப் பொருள்கள் முதலிய வற்றை ஒரு கூடையில் வைத்து அந்த முருக நாயனார் தம் முடைய தலையின் மேல் சுமந்து கொண்டு போய்ப் பக்தி யோடும் மாலைகளை அக்கினீசுவரனுக்கு அணிந்து, வாய்ப் :பாக அமைந்த அருச்சனைகளைப் பல மலர்களாலும், வில் வப் பத்திரங்களாலும், வண்ணப் பத்திரங்களாலும் பக்குவ மாகச் செய்து பக்தியோடு இருப்பவர்; பரமேசுவரருக்குரிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாய