பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; :

.效

162 பெரிய புராண விளக்கம்-3

" அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து கன்னர் மகிழ்ச்சி மனம்கொள்ள நாளும் பூசை வழுவாமே. பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து

- பரவினார்.' அன்ன வடிவும்- அன்னப் பறவையின் வடிவத்தையும்.

ஏனமுமாய்-பன்றியின் உருவத்தையும் எடுத்துக் கொண்ட

வர்களாகி; திணை மயக்கம். அறிவார் இருவர்-பிரமதேவனும் திருமாலும் பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தம்முடைய திருமுடியையும் திருவடிகளையும் தேடி அறிந்து கொள்ள முயன்றவர்களாகிய அந்த இரண்டு பேர்களும். அறிவார்: ஒருமை பன்மை மயக்கம். அறியாமல்-அந்த இரண்டையும்

தெரிந்து கொள்ளாமல், மன்னும்-நிலை பெற்று விளங்கும்.

புகலூர்.திருப்புகலூரில். உறைவாரை-எழுந்தருளித் தங்கும் வர்த்தமானேசுவரர் கோயில் கொண்டிருக்கும் வர்த்தமானேச் சுரத்தில். நன்னர்-நன்றாக. மகிழ்ச்சி-ஆனந்தத்தை. மனம்தம்முடைய திருவுள்ளத்தில். கொள்ள-மேற் கொள்ளும் வண்ணம். நாளும்-ஒவ்வொரு நாளும். பூசை-அந்த முருக நாயனார் அக்கினிசுவரருடைய பூசையை. வழுவாமே. தவறாமல், பன்னும்-பலகாலும் உச்சரிக்கும். பெருமைபெருமையைப் பெற்ற, அஞ்சு எழுத்தும்-ந, ம, சி, வா, ய. என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். பயின்றே-ஜபித்துக் கொண்டே.பணிந்து-அந்த வர்த்தமானேசுவரரை வணங்கி. பரவினார்-வாழ்த்தினார்.

அடுத்து உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தத் திருப்புகலூரில் தங்கியிருக்கும் அழகிய முருக

நாயனார், அழகு நிரம்பிய புகலியென்னும் சீகாழியில் திரு.

வவதாரம் செய்தருளிய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய மங்கல வாத்தியங்கள்

பொங்கி எழுந்து ஒலிக்கும் திருமணத்தில் தாம் முன் பிறவி,