பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரிய புராண விளக்கம்- 5

னோகிய அக்கினீசுவரனுடைய அடி-திருவடிகளின்; ஒருமை பன்மை மயக்கம். நிழல்-நிழலில், தலையாம்-தலைமைப் பதவியாகும். நிலைமை-நிலையை சார்வுற்றார்-அந்த நாயனார் சேர்ந்தார்.

இந்த முருக நாயனார் புராணத்தில் இறுதியாக உள்ள 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு: x பாம்புகளைப் புனைந்த இடுப்பை உடைய அக்கினி சுவரரை அர்ச்சனை புரிந்து அந்த ஈசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளின் நிழலின் கீழ் சேர்ந்து விளங் கும் திருப்புகலூரில் திருவவதாரம் செய்தருளிய முருக நாய னாருடைய உண்மையான திருத்தொண்டினுடைய திறத்தை வாழ்த்தி மறைவில் அவரிடம் வருபவரைத் தம்முடைய திரு வுள்ளத்தில் உருத்திரத்தை ஜபித்துக் கொண்டு புகழும் பக்த ராகிய உருத்திர பசுபதி நாயனார் சிவபெருமானை வணங்கி வாழ்ந்த பெருமையைப் பாடலானேன். பாடல் வருமாறு: அரவம் அணிந்த அரையாரை அருச்சித் தவர்தம் கழல்

- நிழற்கீழ் விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின்

- திறம்போற்றிக் கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம்

கொண்டு பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை - - * பகர்வுற்றேன்.'" இது சேக்கிழார் அடுத்து வரும் உருத்திர பசுபதி நாய னார் புராணத்திற்குத் தோற்றுவாயாகப் பாடியருளிய பாடல். - . . -

அரவம்-பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம்.அணிந்தபுனைந்த, அரையாரை-இடுப்பை உடைய அக்கினீசுவரரை. அருச்சித்து-அருச்சனை புரிந்து. அவர் தம். அந்த ஈசுவர ருடைய, தம்: அசை நிலை. க ழ ல் வெற்றிக்கழலைப். பூண்ட திருவடிகளின் ஆகு பெயர். நிழற் கீழ்-நிழலின்