பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருத்திர பசுபதி நாயனார் புராணம் 175

உமாதேவியைத் தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்ச்சியை அடைந்தவராகிய சிவபெருமானார் உவகையை அடைந்தருளினார். பாடல் வருமாறு:

" அரும றைப்பயன் ஆகிய உருத்திரம் அதனை

வருமு றைப்பெரும் பகலும் எல்லியும் வழுவாமே திரும லர்ப்பொகுட் டிருந்தவன் அனையவர் சிலநாள் ஒருமை உயத்திட உமைஇடம் மகிழ்ந்தவர் உவந்தார்.” அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள மறை-யஜூர் வேதத்தினுடைய ப்:சந்தி. பயன்-பிர யோசனம் ஆகிய-ஆக உள்ள உருத்திரம்-உருத்திரமாகிய அதனை-அந்த மந்திரங்களை ஒருமை பன்மை மயக்கம்.வரு. ஒவ்வொரு நாளும்வரும். முறை-முறைமையாகிய, ப்: சந்தி. பெரும்-பெருமையைப்பெற்ற.பகலும்-பகல்நேரத்திலும்,எல்லி யும்-இரவு நேரத்திலும். வழுவாமே-தவறாமல்.திரு-அழகிய. மலர்ப் பொகுட்டு-தாமரை மலரின் உச்சியில். இருந்தவன்அமர்ந்திருப்பவனாகிய பிரம தேவனை.அனையவர்-போன்ற வராகிய அந்த உருத்திர பசுபதி நாயனார். சிலநாள்.சில தினங்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஒருமைஒருமைப்பிர்ட்டோடு. உய்த்திட-தம்முடைய திருவுள்ளத் தைச் செலுத்த், உமை-உமாதேவியை இடம்-தம்முடைய வாம பாகத்தில். மகிழ்ந்தவர்-எழுந்தருளச் செய்து 'மகிழ்ச்சியை அடைந்தவராகிய சிவபெருமானார். உவந்தார் -உவகையை அடைந்தருளினார். - - --

"அந்தணருக்குப் பிரமதேவன் உவமை: கலைமகள் தலைமகன் இவனென் வருபவர்." என்று திருஞான சம் பந்தமூர்த்தி நாயன்ர்ரும், செம்மலர் மேல் வந்தெழுந்த அந்தணர் போல் தோன்றினார்.' என்று சேக்கிழாரும், 'வந்துமுனி எய்துதலும் மார் பினணியாரம். அந்தர தலத்திரவி அஞ்ச ஒளிவிஞ்சக், கந்தமலரிற் கடவுள் தன்வரவு காணும் இந்திரன் எனக் கடிதெழுந்தான்." (சையடைப் படலம்,4), "வாச நாண் மலரோன் அன்னமாமுனி.'.