பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - பெரிய புராண விளக்கம்-5

(காடகை வதைப் படலம், 77), பூந்தண் சேக்கைப் புனி' தனையே பொரு.வேய்ந்த கேண்மை சதானந்தனென்றெனும், வாய்ந்த மாதவன்.", அலரியோன் தானும் நானும் வடிவு." (மிதிலைக் காட்சிப் படலம், 87, 110). தாமரைக் கிழவனோ.’ (பிணி விடு படலம், 70) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. . . . .

பிறகு உள்ள 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: விருப்பத்தைப் பெற்ற பக்தராகிய உருத்திர பசுபதி நாயனாருடைய அருமையாகிய தவத்தினுடைய பெருமை யையும் தாம் தெரிந்து கொண்டு சேர்ந்த வேதமந்திரங்களினு: டைய நியதியினுடைய மிகுதியான நிலையையும் கண்டு விருப்பத்தை அடைந்து எல்லாத் தேவர்களுக்கும் முதல் A வை வராகிய சிவபெருமானார் விரும்பித் தம்முடைய திருவருளை வழங்க அந்த நாயனார் தீங்கு ஏதும் இல்லாத சிவபுரியாகிய சைவாசத்தின் எல்லையிற் சென்று சேர்ந்து விட்டார். பாடல் வருமாறு: . k ' காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த

வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்ய மற்றவர்தாம் . திதி லாகிலைச் சிவபுரி எல்லையிற் சேர்ந்தார்.' காதல்-உருத்திரத்தை ஒதும் விருப்பத்தைப் பெற்ற..அன்பர் தம்.பக்தராகிய உருத்திர பசுபதி நாயனாருடைய தம்: அசை நிலை. அரும்-அருமையாகப் புரிந்த, தவதவத்தினுடைய. ப்:சந்தி. பெருமையும்.பெருமையையும்,கலந்த-தாம் தெரிந்து கொண்டு சேர்ந்த வேத யஜுர் வேதத்தில் உள்ள மந்திரஉருத்திர மந்திரங்களை; ஒருமை பன்மை மயக்கம். நியதி. யின்-அவற்றிற்குரிய வரையறையோடு புரிந்த மிகுதியும்மிகுதியாகிய சிறப்பையும் கண்டு. விரும்பிவிருப்பத்தை அடைந்து. ஆதி நாயகர்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தலைவராகிய சிவபெருமானார். அமர்ந்து-விரும்பி. அருள்தம்முடைய திருவருளை. செய்ய - வழங்க. மற்று: அசை