பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் ' [8]

முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கைஏற்கும் அகன்பணைநீர் கன்னாட்டு மேற்கானாட் டாதனுார்.' உலகு-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். பகர்ந்து-பாராட்டி. சீர்-சீர்த்தியை, போற்றும்வாழ்த்தும். பழைய-பழமையானதும்; வினையாலணையும் பெயர். வளம்-நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன் மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்றதுமாகிய, ஒருமை பன்மை மயக்கம், பதி ஆகும்.-சிவத்தலம் ஆகும். திகழ்ந்தவிளங்கிய, புனல்-நீர் ஓடும். கொள்ளிடம்-கொள்ளிடமாகிய ஆறு. திரை-தன்னுடைய அலைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கரத்தால்-கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். டொன்-தங்கத்தையும். ெச ழு - செழுமையைப் பெற்ற, மணிகள்-மாணிக்கங்களையும். முகந்து-மொண்டு கொண்டு வந்து. தர-வழங்க. இரு-இரண்டு. மருங்கும்-அந்த ஆற்றினுடைய கரைகளின் பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். முளரி மலர்-செந்தாமரை மலராகிய, கை-கையி னால் ஏற்கும்-ஏற்றுக் கொள்ளும். அகன்-அகலமாக உள்ள. பணை-வயல்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம், நீர் நன்னாட்டு-நல்ல சோழ நாட்டில். மேற்கானாட்டுமேற்கானாடு என்னும் உள் நாட்டில். ஆதனூர்-விளங்குவது ஆதனுரர் என்னும் ஊர் ஆகும். .

பிறகு வரும் 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'சிவ பக்தர்கள் தங்களுடைய திருமேனிகளின் மேல் பூசிக்கொண்ட விபூதியினால் மலரும் பெரிய பிரகாசம் 'நெருக்கமாகத் தோன்றும் அந்தச் சிவத்தலமாகிய ஆதனூரில் நிறைந்து வளர்ந்து நிற்கும் கரும்புச் செடிகளினுடைய சாற்றில் அலைகள் மோதும் வலிமையாகிய வரப்புக்களைப் பெற்ற வயல்களில் வெள்ளித் தகடுகளைப் போன்ற வரால் மீன்கள் துள்ளி எழக் காளை மாடுகளைப் பூட்டிய ஏர்களி னுடைய வலிமையைப் பெற்ற கொழுக்கள் உழுத சால்களின்

பெ-12 -