பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பெரிய புராண விளக்கம்-5

மயக்கம். பொதுளி-செறிந்து. நறுவிரை-நறுமணம். சூழ்சுற்றி. செறி-நெருங்கிய, தளிரில்-தளிர்களில்; ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. தினகர மண்டலம்குரிய மண்டலம். மண்டலம்-வட்டம். வருடும்-தன்னுடைய கிரணங்களால் தடவும். செழும்-செழுமையைப் பெற்ற. தருவின்-பல வகை மரங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மாம், மருத மரம். விளா மரம், வில்வ மரம், புளிய மரம், மா மரம், பலா மரம், பலவகை வாழை மரங்கள், தென்னை மரம், பன மரம், மகிழ மரம், கடம்ப மரம், தமால மரம், வேப்ப மரம், வாத நாராயண மரம், பவள மல்லிகை மரம், அசோக மரம், ெந ட் டி லி ங் க ம ர ம் முதலியவை. குலம்-கூட்டம். பெருகி-பெருக வளர்ந்து நின்று. க்சந்தி. கனம்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். மருவி தவழ்ந்து அசைந்து அலைய - அசைந்து அலைந்து நிற்க. க், சந்தி. களி- களிப்பைப் பெற்ற, வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். புடை-பக்கங்களில் ஒருமை பன்மை மயக்கம். சூழ-சுற்றி மொய்க்கும் வண்ணம். ப்:சந்தி, புனல் மழையோ-நீர் மாரியோ. மது மழையோ-தேன் மாரியோ. பொழிவு-அந்த இரண்டு மாரிகளும் பொழிவதை. ஒழியா-ஒழியாமல் விளங்குபவை. பூஞ்சோலை-அந்த ஆத ஆாரில் உள்ள பூம்பொழில்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 4-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

பாளைகள் விரிந்த நறுமணத்தை வீசும் பசுமையான காய்களை உடைய வலிமையான குலைகளைப் பெற்ற தென்ன மரங்களினுடைய அடிகள் அதிருமாறு அவற்றின் மேல் மோதி விசாலமான கிடங்குகளில் எழுமாறு துள்ளிப் பாய்ந்த வாளை மீன்கள் மறையும் வண்ணம் அவற்றின் மேல் உதிர்ந்த தேங்காய்கள் மிதந்து கொண்டு இருக்க, வளமையைப் பெற்ற பலா மரங்களில் பழுத்திருக்கும் நீள