பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம், 185

மாகி முதிர்ச்சியைப் பெற்ற பழங்கள் வெடித்ததனால் ஒழுகிய தேன் வெள்ளத்திலிருந்து அந்த வாளை மீன்கள் எழுந்து துள்ளும். பாடல் வருமாறு: * : - -

பாளைவிரி மணம்கமழும் பைங்காய்வன் குலைத்தெங்கின் தாள்அதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப்பாய்ந்த வாளைபுதை யச்சொரிந்த பழம்மிதப்ப வண்பலவின் நீளமுதிர் கனிகிழிதேன் நீத்தத்தில் எழுந்துகளும்.' பாளை-பாளைகள்; ஒருமை பன்மை மயக்கம். விரி" விரிந்த், பரவிய. மணம்-நறுமணத்தை. கமழும்-வீசும். ல்பம்-பசுமையான. காய்-காய்களை உடைய, ஒருமை: பன்மை மயக்கம். வன்.வலிமையான, குலை-குலைகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தெங்கின்தென்ன மரங்களினுடைய ஒருமை-பன்மை மயக்கம். தாள். அடிகள்; ஒருமை பன்மை மயக்கம். அதிர-அதிருமாறு. மிசை. அவற்றின் மேல். முட்டி-மோதி. த்: சந்தி. தடம்-விசால LিDITঞ্জয়', கிடங்கின்-கிடங்குகளில் ஒருமை பன்மை ம்யக்கம். - கிடங்குநீ-தேங்கியிருக்கும் பள்ளம். எழி-எழுமாறு. ப்:சந்தி. பாய்ந்த-துள்ளிப் பாய்ந்த வாளை-வர்ளை மீன்கள்: ஒருமை பன்மை மயக்கம். புதைய-மறையும் வண்ணம். ச்சந்தி. சொரிந் தி அவ ற்றின் மேல் உதிர்ந்த். பழம்-தேங்காய்கள்: ஒருமை பன்மை மயக்கம். முற்றின தேங்காயை தென்னம் பழம் என்பது மரபு:தென்னம் பழமவீழ்சோணாடா” என் வருதலைக் காண்க. மிதப்ப-மிதந்து கொண்டிருக்க. வண் -வளப்பத்தைப் பெற்ற பலவின்.பலா மரங்களில் பழுத்தி ருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நீள-நீளமான. முதிர் -முதிர்ச்சியைப் பெற்ற. கணி-பழங்கள்: ஒருமை பன்ம்ை மயக்கம். கிழி-வெடித்ததனால் ஒழுகிய தேன் நீத்தத்தில்தேன் வெள்ளத்திலிருந்து; உருபு மயக்கம். எழுந்து-அந்த வாளை மீன்கள் எழுந்து. உகளும்-துள்ளும்.

அடுத்து வரும் 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: