பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 187

ஒருமை பன்மை மயக்கம். செல்வத்தைப் படைத்தவர்கள்' எனலும் ஆம்; திணை மயக்கம். புயல்-மேகங்கள்: ஒருமை .பன்மை மயக்கம். அடையும்-வந்து தவழும். மாடங்கள் பொலிவு-மாடங்கள் தோற்றப் பொலிவை. எய்த-அடைய. மலிவு-மிகுதியை. உடைத்தாய்-பெற்றதாகி. அயலிடை-பக் கத்தில் உள்ள ஊர்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம்: உருபு மயக்கம். வேறு-வேறாக உள்ள மக்கள் ஆகு பெயர். அடி தங்களுடைய திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். நெருங்க.நெருக்கமாக வந்து வணங்குமாறு. க், சந்தி. குடிகுடிமக்கள்: ஒருமை பன்மை மயக்கம். நெருங்கி-நெருக்க மாக அமைந்து. உளது-இருப்பது: இடைக்குறை. அவ்வூர்அந்த ஆதனுர் ஆகும்.

பிறகு வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - அந்த ஆதனுரரில் உள்ள வெளியிடத்தில் இருக்கிற் வயல் லகளுக்குப் பக்கத்தில் பெரியதாக விளங்கும், செய்த கரையில் உறவினர்கள் விழைகின்ற உரிமையைப் பெற்ற வேலையைச் செய்யும் உழவர்களின் சாதி நெருங்கிப் பற்றிக் கொண்ட பசுமையான சுரைச் செடிகள் மேலே படர்ந்து ஒடிய பழமை யான கூரைகளைப் பெற்ற புற்களால் அமைந்த குடிசை களாகிய சிறிய வீடுகள் பல நிறைந்து இருப்பது ஒரு புலைச் சேரி. பாடல் வருமாறு: * .

' மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங் r -- > * , . . குலையில்

சுற்றம்விரும் பியகிழமைத் தொழில்உழவர் சினை

- துவன்றில் பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழம் கூரையுடைன் புற்குரம்பைச் சிற்றில்பல நிறைந்துளதோர் புலைப்பாடி.." மற்று: அசை நிலை. அவ்வூர்-அந்த ஆதனுாரில் உள்ளன. புறம்பணையின்-வெளியிடத்தில் இருக்கிற. வயல்-வயல் களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-பக்கத் தில். - பெரும்-பெரியதாக விளங்கும். குலையில்-செய்த கரையில்.