பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெரிய புராண விளக்கம்-இ

அப்பதியில் ஊர்ப்புலைமை ஆன்றதொழில் தாயத்தார்; ஒப்பிலவர்: நந்தனார் எனஒருவர் உளரானார். இப்படித்தாகிய-இத்தகையதாக உள்ள. கடைஞர்-இழி குல மக்கள்: ஒருமை பன்மை மயக்கம். இருப்பின்-வாழும் இடத்தின். வரைப்பினின்-எல்லையில். வாழ்வார்-வாழ்பவர். மெய்-உண்மையான. ப்: சந்தி. பரிவு-பக்தி. சிவன்-நடராஜப் பெருமானுடைய. கழற்கே-வெற்றிக் கழலைப் பூண்டு விளங் கும் திருவடிகளுக்கே ஆகு பெயர். விளைந்த-தம்முடைய திரு. வுள்ளத்தில் உண்டாகிய, உணர்வொடும்-உணர்ச்சியோடும். இத்தார்.திருவவதாரம் செய்தருளியவர். அப்பதியில்-அந்த ஆதனூரில். ஆர். ஊருக்குரிய. ப்: சந்தி. புலைமை-புலைத் தன்மை. ஆன்ற-அமைந்தி. தொழில்-வேலையில், தாயத் தார்-உரிமையை உடையவர். ஒப்பிலவர்-அவருக்கு நிகர் இ ல் லா த வ ரா கி. ய. நந்தனார் என-நந்தனார் என்ற திருநாமத்தைப் பெற்ற. என: இடைக்குறை. ஒருவர். ஒரு புலையர். உளரானார் - இருப்பவராயினார். உ ள ர். இடைக்குறை.

பிறகு வரும் 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தாம் ஆதனூரில் திருவவதாரம் செய்தருளி உணர்ச்சி ஆரம்பமான பிறகு பிறைச்சந்திரனாகிய கண்ணியைச் சூடும். பெருமையையும் தகுதியையும் பெற்றவராகிய நடராஜப் பெருமானாரிடத்தில் சிறப்பாக அமைந்த பெரியதாக இருக், கும் விருப்பத்தோடு, நேர்மையாகிய செயல்களைச் செய்யும். திருவுள்ளத்தை உடையவராய்,மறந்தும் வேறு ஒரு நினைவும். இல்லாமல் தாம் பிறந்த பிறப்பினுடைய வழியில் தமக்குக் கிடைத்த தருமங்களைச் செய்யும் மேற்கோளைப் பெற்றவ. ராகவே அந்த நடராஜப் பெருமானாருடைய திருவடிகளுக்கு, உரிய திருத்தொண்டுகளின் வழியில் அந்த நந்தனார் நிலை. ப்ாக நின்றார். பாடல் வருமாறு:

பிறந்துணர்வு தொடங்கியபின் பிறைக்கண்ணிப் பெருங் . தகையால்