பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - - பெரிய புராண விளக்கம்-5

சோரோசனையையும். இது பசு மாட்டின் வயிற்றில் உண்டாவது, அளித்துள்ளார்.அந்த நாயனார் வழங்கியிருக். கிறவராக விளங்கினார்.

பின்பு உள்ள 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: இந்த விதங்களால் தம்முடைய வேலையில் செய்ய. தம்மால் முடிந்த எல்லாவற்றையும் எந்த இடத்திலும் தாம் புரிகின்ற திருத்தொண்டுகளையும் பல ஊர்களில் உள்ள ஆலயங்களின் அழகிய கோபுர வாயில்களுக்கு வெளியில் நின்று. கொண்டு உண்மையாகத் தம்முடைய திருவுள்ளத்தில் மேவிய பெரிய பக்தியின் மிகுதியினால் அந்தநாயனார் கூத்தாடுவதும். அந்த இயல்போடு பாடல்களைப் பாடுவதுமாகி அந்த நந்த ாைர்நடந்து வருவார்; அந்தக் காலத்தில். பாடல் வருமாறு:

'இவ்வகையால் தம்தொழிலின் இயன்றளலாம்

•- ? ... . . . . எவ்விடத்தும்: செய்வனவும் கோயில்களில் திருவாயிற் புறம்நின்று மெய்விரவு பேரன்டி மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பில் பாடுதலு மாய்நிகழ்வார் அங்காளில்.' இந்தப் பாடல் குளகம். இவ்வகையால்-இந்த விதங். களால்; ஒருமை பன்மை மயக்கம். தம்-தம்முடைய. தொழி: லின்-வேலையில். இயன்ற எலாம்-தம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும். எலாம்: இடைக்குறை. எவ் விடத்தும்எந்த இடத்திலும். செய்வனவும்-தாம் புரிகின்ற திருத் தொண்டுகளையும். கோயில்களில்-பல ஊர்களில் உள்ள ஆல யங்களின் திரு-அழகிய வாயில்-கோபுர வாயில்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். புறம்-வெளிப் பக்கத்தில். நின்றுநின்று கொண்டு. மெய்-உண்மையாக. விரவு-தம்முடைய திருவுள்ளத்தில் மேவிய. பேரன்பு-பெரிய பக்தியின். மிகுதி. யினால்-மிகுதியால். ஆடுதலும்-கூத்தாடுவதும். அவ்வியல் பில்-அந்த இயல்போடு; உருபு மயக்கம். பாடுதலுமாய்-பாடு: வதுமாகி, நிகழ்வார்-அந்த நந்தனார் நடந்து வருவார். அந்நாளில்-அந்தக் காலத்தில்.