பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்-5

சொக்கநாயகி அம்மை. இது வைத்தீசுவரன் கோயிலுக்கு மேற்கில் 2 மைல் தூரத்தில் உள்ளது. திருநாளைப் போவார் நாயனார் தம்மை நேரே தரிசித்து வணங்கும் பொருட்டுச் சிவலோகநாதர் தமக்கு முன் இருந்த நந்திதேவரைச் சற்றே விலகியிருக்குமாறு செய்தருளிய தலம் இது. சுந்தர மூர்த்தி தாயனாரும் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் நண்பர்கள் ஆனபிறகு இருவருமாக வந்து வணங்கிய தலம் இது. கலிக் காம நாயனார் இந்தத் தலத்தில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். அந்த நாயனாரின் பொருட்டுச் சிவலோக நாதர் பன்னிரண்டு வேலி நிலத்தை இரண்டு தடவைகள் பெற்றுக் கொண்டு மழையில்லாமல் உயிர்கள் வருந்திய காலத்தில் மழையைப் பெய்யுமாறு திருவருள் பாலித்து உலகை உய்வித்த தவம் இது. இந்தச் செய்தி இத்தலத்துக் குரிய பின்வரும் தேவாரப் பாசுரத்தால் தெரிய வரும்.

வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை - - மாநிலம் தருகோம்

உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள்

வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும்

- ப்ொழில் திருப்புன்கூருளானே.” இது சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய பாசுரம். அதே தி ரு ப் ப தி க த் தி ல் மூன்றாவது பாசுரத்தில், ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோன்’ என்று வருவதைத காண்க. நம்பியாண்டார் நம்பி பாடியருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில், : -

பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த கன்னன்மை தீரப் புளிற்றுக் கலிக்காமற் கன்று புன்கூர் மன்னும் மழைபொழிந் தீரறு வேலிகொண்

டாங்கவற்கே