பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரிய புராண விளக்கம்-5

கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவராகிய இட ஆகு பெயர். க்: சந்தி. கண்ணுதலார்-தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்ற சிவலோகநாதர். திரு.அழகிய முன்பு-தம்முடைய சந்நிதியில் இருந்த. பேரேற்றை-பெரிய திருவுருவத்தைப் பெற்ற நந்தியெம் பெருமானை. விலங்கவிலகுமாறு. அருள்-தம்முடைய திருவருளை. புரிந்தருளிவழங்கியருளி. ப்: சந்தி, புலப்படுத்தார்-நந்தனாருக்குத் தம்மை நன்றாகத் தரிசிக்கும். வண்ணம் செய்தருளினார்.

அடுத்து வரும் 18-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'நந்தன்ார் சிவலோக நாதருடைய அழகிய கோபுர வாச்லுக்கு முன்னால் நின்று கொண்டு இந்த உலகத்தில் பிறக்கும் பிறப்பைத் தவிர்ப்பவராகிய அந்த நாதருடைய திருப்பணிகளைப் புரிந்து விட்டு அந்த நாதரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடைய பிடரியோடு வார்கள் அலையு. மாறு செல்வாராகிய அந்த நாயனார் பிறகு ஓரிடம் பள்ளத் துடனும் சேர்ந்திருக்கும் இயல்பைப் பார்த்து அன்பை மேற் கொண்டு ஒரு குளத்தைத் தோண்டினார். பாடல் வருமாறு:

'சிவலோகம் உடையவர்தம் திருவாயில் முன்கின்று

பவ்லோக்ம் கடப்பவர்தம் பணிவிட்டுப் பணிந்தெழுந்து சுவலோடு வாரலையப் போவார்பின் பொருசூழல் அவலோடும் அடுத்ததுகண் டாதரித்துக் குளம்

- தொட்டார்." சிவலோகம் உடையவர் தம்-நந்தனார் சிவலோக நாதருடைய. தம்:அசைநிலை. திரு-அழகிய. வாயில்-கோபுர வாச்லுக்கு. முன்-முன்னால், நின்று-நின்று கொண்டு. பவலோகம்-இந்த உலகத்தில் பிறக்கும் பிறப்பை. சுடப்பவர் தம்-தவிர்ப்பவராகிய அந்த நாதருடைய. தம்:அசை நிலை. பணி-திருப்பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். விட்டு. புரிந்து விட்டு. ப்:சந்தி. பணிந்து-அந்த நாதரைத் தரை யில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து