பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண் விளக்கம்-5

" இத்தன்ம்ை ஈசர்மகிழ் பதிபலவும் சென்றிறைஞ்சி

மெய்த்ததிருத் தொண்டுசெய்து விரவுவார் மிக்கெழுந்த சித்தமொடும் திருத்தில்லைத் திருமன்று சென்றிறைஞ்ச் உய்த்தபெரும் காதலுணர் விொழியாது வந்துதிப்ப.' இந்தப் பாடல் குளகம். இத்தன்மை-இந்தப் பான்மை யில். ஈசர்-பரமேசுவரர். மகிழ்-மகிழ்ந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். பதி-சிவத்தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும்-பலவற்றிற்கும். சென்று-நந்த னோர் எழுந்தருளி. இறைஞ்சி-அந்தத் தலங்களில் விளங்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு. மெய்த்த-உண்மை யாக உள்ள. திருத்தொண்டு-திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். செய்து-புரிந்து கொண்டு. விரவுவார்நடப்பாராகி; முற்றெச்சம். மிக்கு-மிகுதியாக அமைந்து, எழுந்த-பக்தி எழுந்த சித்தமொடும்-திருவுள்ளத்தோடும். திரு.அழகிய, த்: சந்தி. தில்லை-தில்லையாகிய சிதம்பரத் தில் உள்ள ஆலயத்தில் விளங்கும்; இட ஆகுபெயர். த்:சந்தி. திருமன்று-திருச்சிற்றம்பலத்திற்கு. சென்று-எழுந்தருளி. இறைஞ்ச-நடராஜப் பெருமானாரை வணங்குமாறு. உய்த்ததம்மைச் செலுத்திய, பெரும்-பெருகி எழும். காதல்-விருப்ப மாகிய, உணர்வு-உணர்ச்சி. ஒழியாது-போகாமல், வந்து உதிப்ப-வந்து தம்முடைய திருவுள்ளத்தில் தோன்ற.

பிறகு வரும் 21-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - "அன்றைக்கு இராத்திரியில் நந்தனார் தம்முடைய கண்கள்ை மூடி உறங்கவில்லை; விடிந்ததன் பிறகு 'அந்தச் சிதம்பரத்தை அடியேன் போய்ச் சேருவதற்கு அடியேனிடம் பொருந்தி அடைந்திருக்கும் இயல்பு அடியேன் பிறந்துள்ள் பறையர் சாதியோடு பொருத்தமாக இல்லை' என்று எண்ணி மீண்டும், இந்த நிலையும் அடியேனுடைய தல்ை வனாகிய நடராஜப் பெருமானுடைய கட்டளை' என்று எண்ணி அந்தச் சிதம்பரத்திற்கு எழுந்தருளுவதை விட்டு விடுபவராகி நன்றாகவும் தம்முடைய திருவுள்ளத்தில்