பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 207

எழுந்து தோன்றும் விருப்பம் மிகுதியாக உண்டாக, *ந்ாளைக்கு அடியேன் சிதம்பரத்திற்குச் செல்லுவேன்’ என்று எண்ணிக் கொள்வாரானார். பர்டல் வருமாறு:

அன்றிரவு கண்துயிலார்; புலர்ந்ததற்பின், அங்கெய்த ஒன்றியனை தருதன்மை உறுகுலத்தோ டிசைவில்லை.” என்.'றிதுவும் எம்பெருமான் ஏவல்."எனப் போக்கொழி

- - 6) It is கன்றும்ாழும் காதல்மிக, நாளைப்போ வேன்' என்பார்.' அன்று-அன்றைக்கு. இரவு-இராத்திரியில். கண்-நந்த னார் தம்முடைய கண்களை ஒருமை பன்மை மயக்கம். துயி ல்ார்-மூடி உறங்கவில்லை. புலர்ந்ததற்பின்-விடிந்ததற்குப் பிறகு அங்கு-அந்தச் சிதம்பரத்தை. எய்த்-அடியேன் போய் அடைவதற்கு. ஒன்றி அணைதரு-அடியேனிடம் பொருந்தி அடைந்திருக்கும். தன்மை-இயல்பு. உறு-அடியேன் பிறந் துள்ள. குலத்தோடு-பறையர் சாதியோடு, இசைவு இல்லை -பொருத்தமாக இல்ல்ை. என்று-என்று எண்ணி. இதுவும்மீண்டும் இந்த நிலையும். எம்பெருமான்-அடியேனுடைய தலைவனாகிய நடராஜப் பெருமானுடைய. ஏவல்-கட்டள்ை. என-என்று எண்ணிச் சமாதானத்தை அடைந்து இடைக் குறை. ப்:சந்தி, போக்கு-சிதம்பரத்திற்கு எழுந்தருளுவதை. ஒழிவார்-விட்டு விடுபவராகி; முற்றெச்சம். நன்றும்-நன்றா கத் தோன்றுவதும். எழும்-தம்முடைய திருவுள்ளத்தில் எழுவதுமாகிய, வினையாலணையும் பெயர். காதல்-விருப்பம். மிக-மிகுதியாக உண்டாக. நாள்ை-நாளைக்கு. ப்:சந்தி, போவேன்-அடியேன் சிதம்பரத்திற்குச் செல்வேன். என்பார். என்று எண்ணிக் கொள்வாரானார்.

பிறகு வரும் 12-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'நந்தனார் அவ்வாறு, "நாளைக்குச் சிதம்பரத்திற்குச் சேல்லுவேன்' என்று எண்ணிக் கொண்டு பல தினங்கள் கழியப் பொறுக்காமல் பூளை மலரைப் போன்றதாகும் இந்த மானிடப் பிறவியின் கட்டு நீங்கும் வண்ணம் செல்பவ