பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$208 பெரிய புராண விளக்கம்-3

ராகி பாளைகளும் மலர்களும் நிறைந்த பாக்கு மரங்கள் சுற்றி உள்ள பழமையான ஊராகிய தம்முடைய ஆதனுாரிலி' ருந்தும் எழுந்தருளி ஆண் வாளை மீன்கள் துள்ளி எழும் வயல்கள் சுற்றியுள்ள தில்லையாகிய சிதம்பரத்திற்குப் பக்கத்தில் சென்று சேர்வாரானார். பாடல் வருமாறு: * காளைப்போ வேன்’ என்று நாள்கள்செலத் தரியாது

பூளைப்பூ வாம்பிறவிப் பிணைப்பொழியப் போவாராய்ப் பாளைப்பூங் கழு குடுத்த பழம்பதியின் நின்றும்போய் வாளைப்போத் தெழுபழனம் சூழ்தில்லை மருங்கணை

- - 6) is so . நாளை-நந்தனார் அவ்வாறு நாளைக்கு. ப்:சந்தி. போவேன்-அடியேன் சிதம்பரத்திற்குச் செல்லுவேன். என்றுஎன எண்ணிக் கொண்டிருந்து. நாள்கள்-பல தினங்கள். செல-கழிய; இடைக்குறை. த்:சந்தி. தரியாது-அந்தத் தாமதத்தைப் பொறுக்க மாட்டாமல்.பூளைப்பூவாம்-பூளைப் பூவைப் போலச் சில தினங்களே வாழும்; "உனக்கமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின." தில் வருவதைக் காண்க. பிறவி-இந்த மானிடப் பிறவியின். ப்:சந்தி. பிணைப்பு-கட்டு. ஒழிய-நீங்கும் வண்ணம். ப்:சந்தி. போவாராய்-செல்பவரா கி. ப்: சந்தி. பாளை-பாளைகளை யும்; ஒ ரு ைம ப ன் ைம ம ய க் க ம் . ப்சந்தி. பூம்-மலர்களையும் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். சமுகு-பாச்கு மரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உடுத்தசுற்றியுள்ள பழம்-தம்முடைய பழமையாகவிருக்கும். பதி யினின்றும்-ஊராகிய ஆதனுரிலிருந்தும். போய்-எழுந்தருளி. வாளைப் போத்து-ஆண் வாளை மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். எழும்-துள்ளி எழுந்து பாயும், பழனம்-வயல்கள்; ஒருமை டன் மை மயச்சம். சூழ்-சுற்றி விளங்கும். தில்லைதில்லையாகிய சிதம்பரத்திற்கு. மருங் கு- பக்கத்தில். அணை வார்-சென்று சேர்வாரானார்.

பிறகு வரும் 23-ஆம் சவியின் உள்ளுறை வருமாறு:

என்று கம்பராமாயணத்