பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 209

அவ்வாறு நந்தனார் சிதம்பரத்தை நோக்கி எழுந்தரு. வளிய சமயத்தில் அந்தச் சிவத்தலத்தினுடைய அழகிய எல்லையில் தரையில் விழுந்து நடராஜப் பெருமானாரைத் தியானித்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு பலவாக விளங்கும் சிவந்த நெருப்பை வளரச் செய்து தில்லைவாழ் அந்தணர்கள் புரிகின்ற யாகத் தில் மேல் எழும் புகையையும், மிகுதியாக இருக்கும் பெரு மையைப் பெற்ற வேத பாடசாலைகளையும், தேவாரத் திரு வாசகப் பாசுரங்களை ஒதும் மடங்கள் நெருக்கமாக உள்ள வற்றையும், அந்த நாயனார் பார்த்து விட்டு, தாம் பிறந்து தங்கும் தம்முடைய பறைச்சாதியை எண்ணிடஆச்சூத்தை அடைந்து சிதம்பரத்துக்குள் போகாதவராகி அந்த எல்லை ஆயிலேயே நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

செல்கின்ற போழ்தந்தத் திருவெல்லை பணிக்தெழுந்து பல்கும்செந் தீவளர்த்த பயில்வேள்வி எழும்டிகை யும் மல்குபெரும் கிடைஒது மடங்கள் நெருங் கினவும் கண் டல்கும்தம் குலம்கினைந்தே அஞ்சிஅணைந் திலர்

நின்றார்.'க செல்கின்ற-அவ்வாறு நந்தனார் சிதம்பரத்தை நோக்கி" எழுந்தருளிய, கால மயக்கம். போழ்து சமயத்தில். அந்தஅந்தச் சிவத்தலத்தினுடைய. த், சந்தி. திரு-அழகிய, எல்லை-எல்லையில். பணிந்து-தரையில் விழுந்து நடராஜப் பெருமானாரைத் தியானித்து வணங்கி விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு.பல்கும்.பலவாக விளங்கும். செம்-சிவந்த தீ-நெருப்பை. வளர்த்த பயில். தில்லைவாழ் அந்தணர்கள் வளரச் செய்து புரிந்த. வேள்வி. யாகத்தில். எழும்-மேல் எழும். புகையும்-புகையையும். மல்குமிகுதியாக இருக்கும். பெரும்-பெருமையைப் பெற்று விளங் கும். கிடை-வேத பாடசாலைகளையும்; ஒருமை பன்மை மயக் கம், ஒது-தேவாரத் திருவாசகப் பாசுரங்களை ஒதும். மடங்கள் நெருங்கினவும்-நெருக்கமாக உள்ள மடங்களையும். கண்டு.