பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 2113

யும்-இந்த வேத பாடசாலைகளையும் திருமடங்களையும். கடந்து-தாண்டிச் சென்று. ஊர் - அந்தச் சிதம்பரமாகிய பெரிய ஊரை. சூழ்-சுற்றி விளங்கும். எயில்-திருமதிலை. உடைய ஆலயத்தின் முன்பு உயரமாக நிற்கும்; இட ஆகு. பெயர். திருவாயிலை-அழகிய கோபுர வாசலின் வழியாக;. உருபு மயக்கம். ப்: சந்தி. புக்கார்-சிதம்பரத்துக்குள் அந்த நாயனார் நுழைந்தார். குன்று-மலைகளை, ஒருமை பன்மை, மயக்கம். அனைய-போல உள்ள மாளிகைகள் தொறும். ஒவ்வொரு மாளிகையிலும். குலவும்-திகழும். வேதிகைகள்யாக சாலைகளில், ஒன்றிய-சேர்ந்திருந்த மூவாயிரம்தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் தாங்கள் புரியும் வேள்வித் தீயில் சொரியும் மூவாயிரம். ஆகுதிகள்ஆகுதிகளாகிய நெய்யும் சமித்துக்கள் முதலியவைகளும். அங்கு-அந்தச் சிதம்பரத்தில். உள-இருக்கின்றன; இடைக் குறை. என்பார்-என்று சான்றோர்கள் கூறுவார்கள்; ஒருமை. பன்மை மயக்கம்.

- மாளிகைக்கு மலை உவமை: மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை. மலையார் மாடம்.', குன் றேய்க்கும் .ெ ந டு வெண் மா ட கொடி.", குன் றடுத்த நன் மாளிகை.", "குன்றமன்ன பொன் மாடக் கொச்சை வயம்.’’, 'மலையின் நிகர் மாடம்.', மலை. யென ஓங்கும் மாளிகை. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'மலை குடைந்தனைய நெடுநிலை மாடம்.' என்று கருவூர்த் தேவரும், "குன்றிருந்த மாடம்." என் திருமழிசையாழ்வாரும், குன்ற மாடத் திருக்குருகூர்." என்று மதுரகவியாழ்வாரும், மலையிலங்கு மாளிகை.". மலையிலங்கு நிரைச் சந்தி மாட வீதி., 'மலையார்ந்த கோலம் சேர்மணி மாடம்", 'மலை குலாம் மாட மங்கை யர் தலைவன்.' என்று திருமங்கையாழ்வ்ாரும், "குன்றம் புேரல் மணிமாடம நீடுதிருக்குருகூர்', 'குன்ற மாமணி, மாட மாளிகை”, “குன்று நேர் மாடமாடே.", மலை

3.