பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பெரிய புராண விளக்கம்-5

தம்பெருமான் பணிகேட்ட தவமறையோர் எல்லாரும்

அம்பலவர் திருவாயில் முன்பச்சமுடன்ஈண்டி ‘எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம்’ என்றேத்தித் தம்பரிவு பெருகவரும் திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.' தம்-தங்களுடைய. பெருமான்-தலைவனாகிய நடராஜப் பெருமான். பணி கேட்ட இட்ட கட்டளையைக் கேட்ட தவ -தவத்தைப் புரிந்த மறையோர்-வேதியர்களாகிய தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாரும்-எல்லோரும். அம்பலவர்-திருச்சிற்றம் பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாரு டைய, திரு-அழகிய வாயில்-கோபுர வாசலுக்கு. முன்புமுன்னால். அச்சமுடன்-பயத்தோடு. ஈண்டி-கூட்டமாகக் கூடிக் கொண்டு வந்து. எம்-அடியேங்களுடைய பெருமான்தலைவனாகிய நடராஜப் பெருமான். அருள் செய்த-திரு வாய் மலர்ந்தருளிச் செய்த, பணி-கட்டளைப் படி செய் வோம்-செய்து நிறைவேற்றுவோம். என்று-என்று கூறி. ஏத்தி-அந்தப் பெருமானைத் துதித்து வணங்கி விட்டு. த் சந்தி. தம்-தம்முடைய, பரிவு-பக்தி. பெருக-பெருகி எழ. வரும்-எழுந்தருளும்.திருத்தொண்டர் பால்-திருத் தொண்ட ராகிய நந்தனாரிடம். சார்ந்தார்.அவர்கள் சேர்ந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -

பிறகு வரும் 30-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

ஐயரே, பொன்னம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ததால் நாங்கள் மூவாயிரம் அந்தணர்களும் இந்தச் சமயத்தில் வெப்ப மான நெருப்பை முட்டி அமைத்துத் தேவரீருக்கு அளிக்க விரும்பி அடைந்தோம்." என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய உருகும் திருவுள்ளத்தைப் பெற்ற திருத்தொண்டரா கிய நந்தனார், "அடியேன் உஜ்ஜீவனத்தை அடைந்தேன்’ அன்று திருவாய் மலர் ந் த ரு ளி ச் .ெ ச ய் து விட்டு அந்தத் தி ல்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்