பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பெரிய புராண விளக்கம்-தி

மூறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம்; திணை மயக்கம். முனிவர்களும்வேதியர்களாகிய அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவா யிரம் பேர்களும். தீ-நெருப்பை. அமைத்த-மூட்டி எரியச் செய்த படி-விதத்தை. மொழிந்தார்-நந்தனாரிடம் திருவாய், மலர்ந்தருளிச் செய்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - "அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் களும் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்ததற்குப் பிறகு, சிதம்பரத்தில் உள்ள ஆலயத்துக்குத் தெற்குத் திசையில் திரு. மதிலுக்கு வெளியில் பிறைச் சந்திரன் தவழும் அழகிய கோபுர வாசலுக்கு முன்பு அமையும் வண்ணம் பின்னிய சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய நடராஜப் பெருமானார் வழங்கிய நிறைந்த திருவருளினால் அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் நெருப்பை மூட்டி எரியச் இசய்த குண்டத்தை நந்தனார் அடைந்து இறையவராகிய நடராஜப் பெருமானாருடைய திருவடிகளைத் தம்முடைய திருவுள்ளத்தில் தியானம் புரிந்து கொண்டே அந்த நெருப் பைச் சுற்றி வலமாக வந்து பிரதட்சிணம் செய்தார். பாடல். வருமாறு: - - - -

மறையவர்கள் மொழிந்ததற்பின் தென்றிசையின் மதிற்

- 日四荡glu° பிறையுரிஞ்சும் திருவாயில் முன்னாகப் பிஞ்ஞகர்தம் கிறையருளால் மறையவர்கள் நெருப்பமைத்த குழிஎய்தி இறையவர்தாள் மனம்கொண்டே எரிசூழ வலம்

கொண்டார்.” மறையவர்கள்.வேதியர்களாகிய அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும். மொழிந்ததற்பின்அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்ததற்குப் பிறகு. இதன் திசையின்-சிதம்பரத்தில் உள்ள ஆ ல ய த் தி ற் கு த், தெற்குத் திக்கில். மதில்-திருமதிலுக்கு. புறத்து-வெளியில்.