பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 225

கின்ற, கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட நடராஜப் பெருமா னாருடைய திருவடிகளை; ஆகு பெயர். வணங்க-பணியும் பொருட்டு. திருநாளைப் போவாராம்-திருநாளைப் போவா ராகும். மறை-எல்லா வேதங்களையும் முறையாக அத்திய யனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். முனிவர்-அந்தணர். வருகின்றார்-எழுந்தருளுகின்றார். பிறகு வரும் 35-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் திரு நாளைப் போவார் நாயனாரோடு எழுந்தருள அந்த அந்த ணர்கள் எழுந்தருளி அடைந்து முல்லை நிலத்தில் வாழும் மான்குட்டியை ஏந்திய கையை உடைய நடராஜப் பெருமா னார் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தின் முன்னால் உயரமாக நிற்கும்.கோபுர வாசலில் நின்றவாறே நடராஜப் பெருமா னாரை வணங்கி மீண்டும் பணிந்து வேகமாக எழுந்தருளி ஆலயத்துக்குள் நுழைந்தார்; இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் சிரு. நடனத்தைப் புரிந்த்ருளும் சிவ லோ. க த் தி ன் எல்லையை, அடைந்துதலைசிறந்து நின்றார்: எல்லா மக்களும் அந்த நாயனாரைப் பார்க்க முடியவில்லை. பாடல் இருமாறு: ' 1. தில்லைவாழ் அந்தணரும் உடன்செல்லச் சென்றெய்திக்

கொல்லைமான்மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழு . திறைஞ்சி , . . بين ب . ஒல்லையோய் உட்புகுந்தார்; உலகுய்ய நடமாடும் • , எல்ல்ைபினைத் தலைப்பட்டார்; யாவர்களும்

। . . . " • கண்டிலரால்." - தில்லை. வாழ் அந்தணரும்-தில்லை வாழ் அந்தணர்கள். மூவாயிரம் பேர்களும். அந்தணர்: ஒருமை. பன்மை மயக்கம். உடன்-திருநாளைப் போவார். நாயனாரோடு. செல்ல-எழுந் தருள ச்: சந்தி. சென்று- எழுந்தருளி. எய்தி-அடைந்து, க்:சந்தி. கொல்லை-முல்லை நிலத்தில் வாழும். மான்மறி.