பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 227 .

அந்தணர்கள்-அவ்வாறு திருநாளைப் போவார் நாய னார் மறைந்து போனதைப் பார்த்துத் தில்லை வாழ் அந்த ணர்கள் மூவாயிரம் பேர்களும். அதிசயித்தார்-வியப்பை அடைந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். அரு-அருமையாக விளங்கும். முனிவர்-முனிவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். துதி செய்தார்.தோத்திரங்களை இயம்பினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். வந்து தம்மிடம் வந்து. அ ைண ந் தசேர்ந்த திருத்தொண்டர் தம்மை-திருத்தொண்டராகிய திரு தாளைப் போவார் நாயனாருடைய உருபு மயக்கம். தம்: அசை நிலை. வினை-பாவங்கள்ாகிய ஒருமை பன்மை மயக் கம். மாசு-அழுக்குக்கள் ஒருமை பன்மை மயக்கம். அறுத்துஎல்லாவற்றையும் போக்கி விட்டு. ச்: சந்தி. சுந்தர-அழை கப். பெற்ற த், சந்தி. தாமரை-செந்தாமரை மலர்களை ஒருமை. பன்மை மயக்கம். புரை யும்-ஒத் து விளங்கும். துணைஇரண்டு. அடிகள்.திருவடிகளையும். தொழுது-வணங்கிக் கொண்டு. இருக்க-கவலையின்றி இருக்குமாறு. அந்தம் - முடிவு. இலா-இல்லாத இடைக்குறை. ஆனந்தப்பெருங்: கூத்தர்-பெருமையை உடைய ஆனந்தத் தாண்டவம் புரிந்: தருளுபவராகிய ஆனந்தத் தாண்டவ மூர்த்தியார். அருள்தம்முடைய திருவருளை. புரித்தார்.அந்தத் திருநாளைப் போவார் நாயன்ர்ருக்கு மகிழ்ந்து வழங்கியருளினார்.

அடுத்து வரும் 37-ஆம் பாடல் இந்தத் திருநாளைப் போவார்தாயனார் புராணத்தின் இறுதிப்பாட்ல் அதன் கருத்து வருமாறு: ' , - ,

அந்தத் திருநாளைப் போவார் நாயனார் அழுக்குக் களைப் பெற்ற தம்முடைய திருமேனியை விடுவதற்காக நெருப்பில் திருமஞ்சளம் புரிந்தருளி விட்டுப் பின்பு அந்த நெருப்பிலிருந்து எழுந்து வந்து நின்று கொண்டு ஒரு குற்ற மும் இல்லாத வேதங்களை அத்தியயனம் செய்து நிறை. வேற்றிய அந்தணனாக மாறி பொன்னம்பலத்தில் திருநட.