பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பெரிய புராண விளக்கம்-5

னம் புரிந்தருளும் பொன்னம்பலவாணருடைய திருவடிகளை அடைந்தார். அந்த நாயனாருடைய தேஜஸ் பொருந்தியவை யும், வெற்றிக் கழலைப் பூண்டவையுமாகிய திருவடிகளை வாழ்த்தி வணங்கி விட்டு, திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தம்முடைய பாவங்களாகிய கயிறு அறுமாறு முயற்சி செய்தவ ருடைய திருத்தொண்டுகளின் இயல்பை இனிமேல் அடியேம் பாடுவோம்.' பாடல் வருமாறு:

மாசுடம்பு விடத்தீயின் மஞ்சனம்செய் தருளிஎழுந் தாசில்மறை முனியாகி அம்பலவர் தாளடைந்தார் தேசுடைய கழல்வாழ்த்தித் திருக்குறிப்புத் தொண்டர் . - வினைப் பாசமற முயன்றவர்தம் திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.. இந்தப் பாடல் அடுத்து வரும் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடியருளியது. மாசு-அந்தத் திருநாளைப் போவார் நாய னார் அழுக்குக்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். உடம்பு-தம்முடைய பறையர் சாதியிற் பிறந்த திருமேனியை. விடவிடுவதற்காக. த்:சந்தி. தீயின்-தில்லை வாழ் அந்த ணர்கள் மூட்டி எரியச் செய்த நெருப்பில். மஞ்சனம்-திரு . மஞ்சனம்; அபிடேகம். செய்தருளி-புரிந்தருளி. எழுந்துஅந்த நெருப்புக் குண்டத்திலிருந்து எழுந்து வந்து நின்று கொண்டு. ஆசு-ஒரு குற்றமும். இல்-இல்லாத, கடைக்குறை. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம். சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை: யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். முனியாகி-அந்தணனாக மாறி, அம்பலவர்-சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பொன்னம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் பொன்னம்பல வாணருடைய. தாள்-திருவடிகளை: ஒருமை பன்மை மயக்கம். அடைந்தார்சேர்ந்தார். தேசு-தேஜஸ்ஸை ஒளியை. உடைய-பெற்ற. கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகு பெயர்.