பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பெரிய புராண விளக்கம்-5.

கள். நம் இல்லத்துக்குச் செல்லுவோம்' என்றாள். அந்த வணிகன் அவள் பேய் மகள் என்பதை அறிந்து அவளோடு செல்ல மறுத்தான். அப்போது அந்த நீலி அந்த ஊரில் வாழ்ந்திருந்த எழுபது வேளாளர்களிடம் சென்று. என் னுடைய கணவர் என்னோடு வர மாட்டேன் என்கிறார். அவரை என்னோடு வருமாறு நீங்கள் சொல்ல வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அந்த வேளாளர்கள் அந்த வணிகனை அழைத்து, நீ இவளுடன் செல்வதற்கு ஏன் மறுக் கிறாய்?" என்று கேட்க, அவன், ஐயோ, அவள் என் மனைவி அல்லள். அவள் ஒரு பேய் மகள். அவளோடு நான் சென்றால் அவள் என்னைக் கொன்று தின்று விடுவாள்' என்றான். அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த எழுபது வேளாளர்களும், நீ இவளோடு போவுதுதான் முறை. ஒரு கால் இவள் நீ சொன்னபடி உன்னைக் கொன்று தின்றுவிட் டால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளித்து எங்களுடைய உயிர்களை விடுவோம்.' என்று உறுதியாகக் கூறினார்கள். அந்த வணிகன் அவர்கள் கூறியதை மறுக்க மாட்டாமல் அந்த நீலியோடு சென்று ஒர் இல்லத்தில் புகுந்தான். அங்*ே அந்த நீலி அவனைக் கொன்று தின்று விட்டாள். மறுநாள் அந்த இல்லத்தைத் திறந்து பார்த்த போது நீலி என்னும் பேய் மகள் அந்த வணிகனைக் கொன்று தின்று விட்டதை அறிந்து கொண்டார்கள். பிறகு அந்த எழுபது வேளாளர் ஆளும் அந்த வணிகனுக்குத் தாங்கள் கூறிய உறுதிமொழிப் படி தீக்குளித்துத் தங்களுடைய உயிர்களை நீத்தார்கள்.

பிறகு வரும் 4-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இது சிவபெருமான் இட்ட ஆக்ஞையாகும் என்று எண்ணி ஒரு வண்ணான் திருமேனியின் மேல் விபூதியைப் போல இருந்த தோற்றத்தைப் பார்த்து, அடியேன் அடிச் சேரன்." என்று அவனுடைய திருவடிகளில் விழுந்து பணிந்து நிற்கும் நெடுந்தூரம் பரவிய சீர்த்தியைப் பெற்ற சேரமான் பெருமாள் நாயனார் ஆட்சி புரிந்தருளிய அழகிய மலை நா