பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 - பெரிய புராண விளக்கம்-5

கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அஞ்சையப்பருக்குரிய திருத்தொண்டுகளையே புரிந்து வந்தார். அவரை அரசை ஏற்று ஆட்சி புரியுமாறு அமைச்சர்கள் வேண்டிக் கொண்டார். கள். அப்போது அஞ்சையப்பரிடம் சென்று அந்தப் பெருமாக். கோதையார் அவருடைய சம்மதத்தைப் பெற வேண்டித். துதித்தார். அஞ்சையப்பர் அரசாட்சி உரிமையையும், எந்த விலங்குகளும், பறவைகள் முதலியவையும், எந்தத் தாய். மொழி பேசும் மக்களும் பேசிய வார்த்கைளைத் தெரிந்து கோள்ளும் அறிவாற்றலை அந்தச் சேர மன்னருக்கு வழங்கி யருளினார். அஞ்சையப்பருடைய ஆணையின் படியே பெரு. மாக்கோதையார் அரசை ஏற்று ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அந்தச் சேர மன்னர் யானையின் மேல் ஏறிக் கொண்டு கொடுங்கோளுர் என்னும் நகரத்தை வலமாக வரும் போது உவர்மண் மூட்டையைத் தன்னுடைய தலை. யின் மேற் சுமந்து கொண்டு ஒரு வண்ணான் தமக்கு முன் னால் வருவதைப் பார்த்தார். மழையினால் அவன் சுமந்து கொண்டிருந்த உவர்மண் கரைந்து அவனுடைய உடம்பின் மேல் வழிந்து திருநீற்றைப் பூசிக் கொண்டவனைப் போலத் தோன்றினான். அவனைப் பார்த்து, 'இவர் சிவபெருமானு: டைய அடியவர்' என்று எண்ணி யானையிலிருந்து இறங்கி வந்து அந்த வண்ணானிடம் சென்று அவனைத் தம்முடைய கைகளைக் கூப்பிக் கும்பிட்டார். அதைக் கண்ட அந்த வண். ணான் தன்னுடைய உள்ளத்தில் கலக்கத்தை அடைந்து. "அடியேன் அடிவண்ணான்' என்று கூறி சேர மன்னரை வணங்கினான். அப்போது அந்தப் பெருமாக் கோதையார், 'அடியேன் அடிச்சேரன். தேவரீர் விபூதியைப் பூசிய திரு. வேடத்தை நினைக்கச் செய்தீர். அதனால் அடியேன் உம் மைப் பணிந்தேன்.’’ என்று கூறி அவனுக்கு விடை கோடுத்து, அனுப்பினார். இந்த வரலாற்றைச் சேக்கிழார் பின் வருமாறு: பாடியருளியிருக்கிறார்.