பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கு றிப்புத் தொண்ட நாயனார் புராணம் 243,

பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம்; சுறவ முள்மருப் பணங்கயர் வண்கழிச் சூழல்."

குறிஞ்சி-மலைச் சாரல்களில். குறவர்.அந்த மலையில் வாழும் குறவர்கள்; ஒரும்ைபன்மை மயக்கம். பல் - பலவகை யாகிய். மணி-இரத்தின்ங்களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன். மாணிக்கம், நீலமண், மரகதக் கல், கோமே, தகம், புட்பராகம். பதுமராகம், வஜ்ரம், வயிடூரியம், மஞ்சள் நிறக்கல் என்பவை. அரித்து-நீரில் அரித்து. இதை-கொல்லை. நிலங்களில்; ஒருமை பன்மை மயக்கம். விதைப்பன-புதைப் பவையாகத் திகழும். கானம்-முல்லை நிலமாகிய காடுகளில்; ஒருமை பன்மை மயக்கம். கறவை பால் கறப்பவை ஆகிய. ஆன்-பசுமாடுகளினுடைய ஒருமை.பன்மை மயக்கம். நிரை. வரிசை. மானுடன்-மான்களோடு ஒருமை பன்மை மயக்கம். பயில்வன-பழகுபவையாக இலகும். பழனம்-வயல்களில், ஒருமை பன்மை மயக்கம். பறவை-பல வகையான பறவைகள்: ஒருமை பன்மை மயக்கம். இருந்து-இருப்பவை ஆகி, இறவுஇறா மீன்களை; ஒருமை பன்மை மயக்கம். அருந்துவ-தின்ப வையாக விளங்கும். கழி - கழி க ைள ச் சார் ந் த , ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. சூழல்-இடங்களில், ஒருமை பன்மை மயக்கம். சுறவம்-சுறா மீன்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம், முள்-முட்களைக் கொண்ட: g ஒருமை பன்மை மயக்கம். மருப்பு:கொம்புகளை நட்டு: ஒருமை பன்மை மயக்கம். அணங்கு-தெய்வங்களை ஒருமை பன்மை மயக்கம். அயர்வன-வழிபடும் இடங்களாகவிளங்கும்.

வலையர்கள் சுறாமீனினுடைய கொம்பை நட்டுத் தெய். வத்தை வணங்குதல்: சினைச் சுறலின் கோடு நட்டு, மன்னச் சேர்த்திய வல்வணங்கினால்..' (பட்டினப்பாலை, 86.7) என்று உருத்திரங்கண்ணனாரும், 'விருப்பின் மீன் சுவர் வினைஞர் கேட்சுறா, மருப்பினாடலும் வருதல், மாண்புணர்ந், தொருப்பட்டீர்ம்புனல்உம்பற் போற்றித்தம், கருத்து வாய்ப்பது கருங்கடற்புறம்." (தணிகைப் புராணம்,

§