பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 - - பெரிய புராண விளக்கம்-5

திருநாட்டுப் படலம், 136), 'புறவுக் கோட்டம் செயும் வனப்பிற் பூவை மொழியார் வழிதான் வாழ், இறவுக் கோட்டுக் கடல் பணிக்கும் எழிலால் அவர் நாட்டினர். இறைஞ்சும், சுறவுக் கோட்டு மலர்ப்புன்னை ஞாழற்பொதும் பர் எவ்விடனும்.’’ (ஆனைக்காப் புராணம், நாட்டுப் படலம், 96) என்று வேறு புலவர்களும் பாடியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மேகங்கள் தவழும் ஆகாயத்தில் சிறந்த மலைகளி: னிடங்கள் இரத்தினங்களை மழையைப் போலப் பொழிபவை யாகத் திகழும்; அந்தக் காஞ்சீபுரத்தில் உள்ள வயல்களினு டைய பக்கங்களில் குளிர்ச்சியைப் பெற்ற கொத்துக்களைக் கொண்ட கொன்றை மலர்கள் முல்லை மலர்களின் பக்கங் களில் தங்கத்தைப் போன்ற மகரந்தப் பொடிகளைப் பொது பவையாக விளங்கும்; அந்த வயல்களைச் சார்ந்த பக்கங் களில் வலையர் சாதிப் பெண்மணிகள். தாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் முத்துக்களை நீர் மிகுதியாகப் பாயும் கால்வாய்கள் பொழிபவையாகத் திகழும்; கடற்கரைப் பக்கங்களில் தாழை மரங்கள் முன்னால் உள்ள நீர் நிலை களினுடைய துறைகளில் யானைகளை மரக்கலங்கள் இறக்கு - வனவாக இலகும். பாடல் வருமாறு: -

  • கொண்டல் வானத்தின் மணி சொரிவனகுல வரைப்பால்;

தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்; வண்டல முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்; கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலம் கடற்பால்." கொண்டல்-மேகங்கள் தவழும்; ஒருமை பன்மை மயக் கம். வானத்தின்-ஆகாயத்தில். மணி-நவரத்தினங்களை; ஒருமை பன்மை மயக்கம்: அவை இன்ன என்பதை வேறோரி டத்தில் கூறினோம், ஆண்டுக் கண்டுணர்க. குல.சிறப்பான. வரைப்பால்-மலைகளின் பக்கங்களில்; மலைச் சாரல்களில்; ஒருமை. புன்மை மயக்கம். சொரிவன-பொழிபவையாகத் திகழும். தளவு-முல்லை மலர்களினுடைய ஒருமை பன்மை,