பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 247

களைப் பெற்றவையாக விளங்கும். உணவு: ஒருமை பன்மை, மயக்கம். - , -: ,

பிறகு உள்ள 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: புல்லாங்குழல்களைப் போல ரீங்காரம் செய்யும் வண்டு களின் கூட்டங்கள் குறிஞ்சி நிலமாகிய மலையைச் சார்ந்த ஊர்களில் குறிஞ்சி யாழைப் போல ரீங்காரம் செய்பவையாக விளங்கும்; முல்லை நிலங்களாகிய காடுகளில் மத்தளங்களை உடையவர்கள் மேகங்களைப் போ ன் ற முழக்கத்தைக் கொள்ள, முல்லைக் கொடிகள் அரும்புகளை அரும்புபவைக. ளாகக் காட்சி அளிக்கும்; மருத நிலங்களாகிய வயல்களும் அவற்றைச் சார்ந்த ஊர்கள் மழலைப் பேச்சைப் போலப் பேசும் மென்மையான கிளிகள் மருத மரங்களில் அமருகின்ற தாங்கள் தங்கும் இடங்களை உடையவையாகத் திகழும்; கடற்கரையைச் சார்ந்த இடமாகிய நெய்தல் நிலத்தில் உள்ள ஊர்கள் நிழலை உண்டாக்கும் தாழை மரங்கள் சுற்றியிருக் கும் நெய்தல் மலர்கள் மலர்ந்த அழகிய கழிகளை உடைய வையாக விளங்கும். பாடல் வருமாறு:

' குழல்செய் வண்டினம் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி;

முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை; மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்; - நிழல்செய் சைதைசூழ் நெய்தலம் கழியன நெய்தல்.’’ குழல்-புல்லாங்குழல்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். செய்-ரிங்காரம் செய்யும். வண்டுவண் டு களி னுடைய ஒருமை பன்மை மயக்கம். இனம்-கூட்டங்கள்: ஒருமை பன்மை மயக்கம். குறிஞ்சி-குறிஞ்சி நிலமாகிய மலை. யைச் சார்ந்த ஊர்களில்; இட ஆகு பெயர். குறிஞ்சி யாழ். குறிஞ்சி யாழைப் போல். முரல்வrை-gங்காரம் செய்பவைக ளாகத் திகழும். முல்லை. முல்லை நிலங்களாகிய காடுகளில்;. ஒருமை பன்மை மயக்கம். முழவு-மத்தளங்களை வைத்திருப்ப வர்கள்; திணை மயக்கம். முழவு: ஒருமை பன்மை மயக்கம். கார்-மேகங்களைப் போல, ஒருமை பன்மை மயக்கம்.கொள