பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 257

ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவராகிய வேதகிரீ சுவரர் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருக்கழுக் குன்றமும்-திருக்கழுக்குன்றம் என்னும் சிவத்தலத்தையும். உடைத்து-அந்தத் தொண்டை வள நாடு பெற்றது. ஆல்: அசை நிலை. என்றால் என்ற சொல்லை வருவிக்க. கொம் பர்-மரக்கிளைகளில்; ஒருமை பன்மை மயக்கம். வண்டு. மலர்ந்த மலர்களில் வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றி மொய்க்கும். குறிஞ்சி-குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் இட ஆகு பெயர். செய்-முன்பிறவியில் புரிந்த, தவ -தவத்தில். குறை-குறைபாடு. உளதோ-உள்ளதோ, இடைக் குறை. இல்லை என்பது கருத்து.

திருக்கழுக்குன்றம்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வேதகிரீசு வரர். அம்பிகையின் திருநாமங்கள் பெண்ணினல்லாள் அம்மை, மலைச் சொக்க நாயகி என்பவை. தீர்த்தம் சங்க தீர்த்தம். இது செங்கற்பட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் 9 மைல் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் உச்சிக் காலத்தில் இரண்டு கழுகுகள் வந்து தங்களுக்கு அளிக்கப் படும் அன்னத்தையும் நெய்யையும் உண்டு விட்டு மலையை வலமாகச் சுற்றிக் கொண்டு போகும். 12-ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் காரணத்தால் சங்க தீர்த்தம் என்று இங்கே உள்ள திருக்குளத்திற்குப் பெயர் அமைந்தது. இந்தத் தலத்தில் தங்கி சங்க தீர்த்தத்தில் நீராடி மலையை வலமாக வந்தால் அடியவர்கள் எத்தகைய நோயையும் போக்கிக் கொள்ளலாம் என்று ஆன்றோர் கூறுவர். மாணிக்க նձlIT ՑF கருக்கு வேதகிரீசுவரர் குருவடிவமாக எழுந்தருளித் தரிசனம் கொடுத்தருளிய தலம் இது. இதனைப் பின் வரும் பாசுரம் புலப்படுத்தும், - --" -

  • பிணக்கிலாதபெ ருந்துறைப்பெரு மானுன் நாமங்கள் பேசுவார்க்