பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 259°

கோட்டங்களும்-திருக்கோயில்களும். நிர ந் து-வரிசையாக அமைந்து. காலவேனிலில்-முதுவேனிற் காலத்தில், கடும். பகல்-கடுமையாகிய நண்பகல் என்னும், பொழுதினை. நேரத்தை, ப், சந்தி. பற்றி பெற்று. ப், சந்தி, பால்ை யும்-பால நிலமும் உடையது: ஆகு பெயர். சொலலாவன என்று கூறுபவையாக இருப்பவை. பர்ல்-பருக்கைக் கற்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். முர்ம்பு மேட்டு நிலங் கள்; ஒருமை பன்மை மயக்கம். உள-இருக்கின்றன: இடைக். குறை.

பிறகு வரும் 16-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மேலே கூறப்பட்ட பாலை நிலத்தின் எல்லைக்கு வெளி யில் உள்ளவை பூங்கொத்துக்களில் வண்டுகள் மொய்த்துத் திரியும் பல பெரியதாக இருக்கும் நீர் ஓடும் காட்டாறு நடு: நடுவில் பரவியிருந்து முல்லை நிலத்தில் உள்ள மென்மையா கிய பூங்கொத்துக்கள் மலர்ந்திருக்கும் குருந்த மரத்தின் மேல் படர்ந்து ஏறிய மலர்களைப் பந்தலைப் போலப் பெற்ற முல்லைக் கொடி படரும் மென்மையான செடிகளில் ಅpu) துள்ளித் தள்ளிவிட்டு அடங்குவது நீளமான முல்லை நில மாகிய காடு. பாடல் வருமாறு:

' சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச்சுரும் பலைக்கும்

பல்பெரும் புனற் கானியா றிடையிடை பரந்து

கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேற் படர்ந்த பூம்பந்தர்

முல்லை மென்புதல் முயலுகைத் தடங்கும் நீள்முல்லை.'

நீள்-நீளமான முல்லை.அந்தத் தொண்டை நாட்டில் உள்ள முல்லை நிலங்களாகிய காடுகளில்; ஒருமை பன்மை மயக்கம். சொல்லும்.மேலே கூறப்பட்ட கால மயக்கம். எல்லையின்-பாலை நிலத்தின் எல்லைக்கு. புறத்தன-வெளி: யில் உள்ளவை. துணர்-பூங்கொத்துக்களில், ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சுரும்பு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக் கம். அலைக்கும்-மொய்த்துத் திரியும். பல்-பல. பெரும்