பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பெரிய புராண விளக்கம்-5

பெரியதாக இருக்கும். புனல்-நீர்ஓடும். கானியாறு-காட்டாறு. இ. குற்றியலிகரம். இடை இடை-நடு நடுவில். பரந்து-பரவி யிருந்து கொல்லை-முல்லை நிலத்தில் உள்ள. மெல்-மென் மையான. இணர்-பூங்கொத்துக்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குருந்தின் மேல்-குருந்த மரத்தின் மேல். படர்ந்த-படர்ந்து ஏறிய. பூம்பந்தர்-மலர்களைப் - பந்தலைப் போலப் பெற்ற. பூம்: ஒருமை பன்மை மயக்கம். முல்லை-முல்லைக் கொடி படரும். மென்-மென்மையான. புதல்-செடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். முயல் உகைத்துமுயல் துள்ளித் தள்ளி விட்டு. அடங்கும்-அடங்கியிருக்கும். இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது.

பிறகு வரும் 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: துண்டமாக உருவத்தைக் கொண்ட குளிர்ச்சியைப் பெற்ற பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றிகளைப் பெற்ற பேதை பருவப் பெண்களினுடைய பற்களை முல்லை அரும்பு கள் திருடிக் கொண்டன என்று களாமலர்கள் பழிச் சொல்லை எடுத்துக் கூறும்; அந்தச் செயலைப் பார்த்து அந்தப் பெண்களுடைய கூந்தல்களைப் போல நிறத்தைப் பெற்ற களாப் பழங்களை முல்லை மலர்கள் பார்த்துத் தங்க ளுக்கும் அந்த நிறம் இருக்கிறது என அவற்றுக்கு எதிரில் நகைப்பவையாக விளங்கும்." பாடல் வருமாறு: - -

பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக் களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும் அளவு கண்ட்வர் குழல்கிறம் கனியும்அக் களவைத் தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்கும்.உண் டென்று. ’ பிளவ-துண்டமாக. கொண்டதன்னுடைய உருவத்தை கொண்ட தண்-குளிர்ச்சியைப் பெற்ற மதி-பிறைச் சந்தி ரனைப் போன்ற, நுதல்-நெற்றிகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். பேதையர்-பேதைப் பருவப் பெண்களினு