பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பெரிய புராண விளக்கம்-5

திருமேனியைப் பெற்றவராகிய உமாபதீசுவரருடைய. நிலா-பிறைச் சந்திரன், த்:சந்தி, திகழ்-விளங்கும். முடிமேல் -திருமுடியின் மீது. மாறு.தனக்கு ஒப்பு வேறு ஏதும். இல்இல்லாத கடைக்குறை. கங்கை தான்-கங்கையாற்றில் ஒடும் நீர் இட ஆகு பெயர். தான்: அசை நிலை. அவர்க்கு. அந்த ஈசுவரருக்கு. மஞ்சனம்-அபிடேக நீரை. தர-வழங்கும் பொருட்டு. அணைந்து-வந்து சேர்ந்து. ஏ: அசை நிலை, ஊறு-ஊறி வரும். நீர்-புனலை. தரும்-அளிக்கும். ஒளி-பிர காசத்தை வீசும். மலர்-மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து ஓங்கி நிற்கும்.ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: மகிழ. மரம், தாழை மரம், வாகை மரம், வேங்கை மரம், மருத மரம், வில்வ மரம், வேப்ப மரம், பூவரச மரம், பவள மல்லிகை மரம் முதலியவை. க்:சந்தி. கலிகை மாநகரைகலிசை மாநகரமாகிய திரு ஊறல் என்னும் சிவத்தலத்தை. நகர்-பெரிய ஊர். வேறு-மேலே கூறியவற்றையல்லாமல் வேறாக. தன்-தன்னுடைய. பெரு-பெருமையைப் பெற்ற. வைப்பு:திருப்பதி.என்.என்று இடைக்குறை. மா-அந்தத் தொண்டை வள நாட்டில் உள்ள பெருமையைக் கொண்ட. முல்லை-முல்லை நிலமாகிய காடு. விளங்கும்-திகழும்.

திரு ஊறல் இது தொண்டை நாட்டில் விளங்கும் சிவத் தலம். இப்போது தக்கோலம் என வழங்கும். இங்கே கோயில் தொண்டிருப்பவர் உமாபதீசுவரர். அம்பிகை உமையம்மை. இது அரக்கோணத்திலிருந்து தென் கிழக்குத் திசையில் ஒரு மைல் தாரத்தில் உள்ளது. நந்தி தேவருடைய வாயிலிருந்து நீர் எந்தக் காலத்திலும் வந்து விழுந்து கொண்டிருக்கும். இதனால் தான் இந்தத் தலத்துக்குத் திருவளறல் என்ற புெயர் அமைந்தது,

இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: " நீரின் மிசைத் துயின்றோன் நிறைநான் முதுனு.

மறியாதன்னு தேரும் வகையமர்ந்தா னவன் சேரும் இடம் வினவிற்