பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கு றிப்புத் தொண்ட நாயனார் புராணம் 267

பாரின் மிசைஅடியார் பலர் வந்திறைஞ்ச மகிழ்த் தாகம ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே. او ه பிறகு உள்ள 20-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "நறுமணம் கமழும் மென்மையான மலர்கள் மிகுதியாக மலர்ந்த மரம், செடி, கொடிகளைப் பெற்ற முல்லை நில மாகிய காட்டைச் சுற்றியுள்ள மருத நிலத்தில் தெளிவைக் கொண்ட அலைகளை வீசும் பல ஆறுகள் மிகுதியான வெள் ளத்தையும் உயர்ச்சியையும் அடைந்து ஒடிச் சென்று பசுமை கயான இலைகளைப் பெற்ற விசாலமான தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களின் பக்கங்களிலும் ஒலியை உண்டாக்கும் வலிமையைக் கொண்ட கரைகளைப் பெற்ற குளங்களிலும் ஏரியிலும் சேருபவைகளாக விளங்கும். பாடல் வருமாறு:

வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம் விசு தெண்டிரை திபல மிக்குயர்ந் தோடிப் பாசடைத்தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ...' வாச-நறுமணம் கமழும். மென்-மென்மையான. மலர்மலர்கள் ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: வேங்கை மலர், வாகை மலர், கடம்ப மலர், பவள மல்லிகை மலர், மா மலர், தேக்க மலர், மகிழ மலர், வில்வ மலர், விளா மலர் முதலியவை. மல்கிய-மிகுதியாக மலர்ந்த, முல்லை-மரம், செடி, கொடிகளைப் பெற்ற முல்லை நில மாகிய காட்டை, செடியில் மலர்ந்த மலர்களாவன: நந்தியா வட்டை மலர், தும்டை மலர் முதலியவை. கொடியில் மலர்ந்த மலர்களாவன:முல்லை மலர், மல்லிகை மலர், இருவாட்சி, மலர்,பூசணி மலர்,பறங்கி மலர் முதலியவை.சூழ்-சுற்றியுள்ள, மருதம்-மருத நிலத்தில். தெண் திரை-தெளிவைக் கொண்ட அலைகளை திரை: ஒருமை பன்மை மயக்கம். வீசு-வீசுகின்ற. நதியுலு:பல ஆறுகள்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கு-மிகுதி: அான வெள்ளத்தையும். உயர்ந்து-உயர்ச்சியையும் அடைந்து.