பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 269.

போந்து-சென்று. ஏ:அசை நிலை. அங்கண்-அந்த இடத்தில். அழகிய இடத்தில் என்றுமாம். நித்திலம்-முத்துக்களையும்: ஒருமை பன்மை மயக்கம். சந்தனம்-சந்தன மரங்களையும்; ஒருமை பன்மை மயக்கம், அகிலொடு-அகில் மரங்களோடு: ஒருமை பன்மை மயக்கம். மணிகள்-மாணிக்கங்களையும். பங்கய-செந்தாமரை ம ல ர் க ளு ம் .ெ வ ண் டா ம ைர. ம ல ர் க ளு ம் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தடம்-தடாகங்களில்; ஒருமை பன்மை மயக்கம். நிறைப்ப-நிறையும் வண்ணம். வந்து இழிவது-வந்து இறங் குவது. பாலி-பாலாறு. -

பிறகு வரும் 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'தன்னுடைய குழந்தை வருடப் பெருகி எழும் பாலைக் கறக்கும் கொங்கைகளைப் பெற்ற அன்னையைப் போல உழவர்கள் முதுவேனிற் காலத்தில் மணல்கள் குவிந்திருக்கும் மேட்டைப் பிசைந்து தங்களுடைய கைகளால் தோண்ட வெள்ளமாக ஒடும் புனல் இரண்டு பக்கங்களிலும் ஒடும் கால்வாய்களினுடைய வழியே மிதந்து வந்து கரையின் மேல் ஏறி பள்ளமாக உள்ள நீளமான வயல்களில் உள்ள பெரிய, மடைகளைத் தகர்ப்பது அந்தப் பாலாறு." பாடல் வருமாறு: " பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்

மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கைவருட வெள்ள நீர்இரு மருங்குகால் வழிமிதந் தேறிப் பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.' பிள்ளை-தன்னுடைய குழந்தை தைவர-வருட ப்:சந்தி. பெருகு-பெருகிஎழும். பால்-பாலை. சொரி-கறக்கும். முலை-கொங்கைகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தாய்போல்-அன்னையைப் போல. மள்ளர்-உழவர்' கள்:ஒருமை பன்மை மயக்கம். வேனிலின்-முதுவேனிற் காலத். தில். மணல்-மணல்கள் குவிந்திருக்கும்; ஒருமை பன்மை மயக் கம். திடர்-மேட்டை. பிசைந்து கை-பிசைந்து தங்களுடைய