பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - பெரிய புராண் விளக்கம்-5

பிளப்பில், அமுது செயதிலர் கொல்-அமுது செய்திலரோ. என்னா-என்று வருந்தி, ப்: சந்தி. பூட்டியதம்முடைய கழுத் தில் வைத்த அச்வாள். அரிவாளை. பற்றி-பிடித்துக் கொண்டு. ப்: சந்தி. புரை-குற்றம். அற-அறுமாறு, விரவும்கலந்திருக்கும். அன்பு-பக்தியை. காட்டிய-தோற்றச் செய்த. நெறியின் வழியில் உள்ளம் தண்டு-கழுத்துக்கு உள்ளே உள்ள பெரு நரம்பு அற-அறும்வண்ணம். க்: சந்தி. கழுத்தி னோடு-தம்முடைய கழுத்தோடு. ஏ: அசை நிலை. ஊட்டி யும்-உணவை விழுங்குவதற்கு உரிய இடமாகிய் முடிச்சை யும். அரியா-அறுத்துவிட்டு. நின்றார். நின் கொண்டிருந்த வராகிய தாயனார். உறு:தமக்கு வந்த பிறப்பு:இந்த மனி தப் பிறவியை. அரிவார். அறுப்பவரை. ஒத்தார்-போல விளங்கினார். . . " - -

பின்பு வரும் 18-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "ஒரு குற்றமும் அற்ற திருவுள்ளத்தைப் பெற்ற பக்த்ரா கிய அந்தத் தாயனார் தம்முடைய கழுத்தை அறுத்துக் கொள்வதற்காக அந்தக் கழுத்தில் வைத்த அரிவாளைப் பிடித்திருக்கும் குற்றம் இல்லாத வண்மையை உடைய தாய, னாருடைய கையைத் தடுப்பதற்குச் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் ஐயராகிய நடராஜப் பெருமானார் பக்கத்தில் வீசிய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருக்கரங் களும், மாவடுக்களைக் கடிக்கும், விடேல், விடேல்' என்ற சத்தமும் அந்தத் தரைப்பிளப்பிலிருந்தும் ஒன்றாகவே எழுந்து புலனாயின. பாடல் வருமாறு:

' மாசறு சிங்தை அன்பர் கழுத்தரி அரிவாள் பற்றும் ஆசில்வண் கையை மாற்ற அம்பலத் தாடும் ஐயர் வீசிய செய்ய கையும் மாவடு, விடேல். விடேல்'என் னோசையும் கமரில் கின்றும் ஒக்கவே எழுந்த அன்றே.’’ மாசு-ஒரு குற்றமும். அறு-அற்று. சிந்தை-திருவுள்ளத் தைப்பெற்ற அன்பர்-பக்தராகிய அந்தத் தாயனார். கழுத்து.