பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 277

தங்களுடைய திருமாளிகைகளுக்கு இவரும் விருந்தினர்களை; திணை மயக்கம். எதிர் கொள்ளும்-அவர்களுக்கு எதிரில் சென்று வரவேற்கும். பீடு-பெருமை. தங்கிய-நிலையாகத் தங்கியுள்ள. பெரும்-பெருமையைப் பெற்ற. குடி-குடி மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். மனையறம்-இல்லற வாழ்வை நடத்திக் கொண்டு, பிறங்கும்-விளங்குவார்கள்; திணை மயக்கம். மாடம்-அந்த ஊர்கள் மாடங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஓங்கிய-உயரமாக நின்று விளங்கிய, மறு கின.தெருக்களை உடையவை. மறுகு: ஒருமை பன்மை மயக்கம். - பிறகு வரும் 29-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: செல்வத்தைப் படைத்த மக்கள் உயர்ச்சியைப் பெற்று விளங்கிய அழகிய வேதியர்கள் வாழும் செழுமையைப் பெற்ற வையாகிய அந்தத் தொண்டைவள நாட்டில் உள்ள ஊர் கள்; பழையவையாகிய இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அகர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்கள் முதலிய பெருமையைப் பெற்ற சாத்திரங்களை அந்தணர்கள் ஒதும் இனிய நாதம் பொருந்தி இல்லற வாழ்வை விரும்பி நடத்திக் கொண்டு யாகங்களில் வளர்க்கும் தீயில் சொரியும் நெய், சமித்துக்கள் முதலிய ஆகுதிகளினால் எழுந்து தோன்றிய மிகுதியாக உள்ள குளிர்ச்சியைப் பெற்ற புகை மழையை வழங்கும் மேகங்களினுடைய கூட்டத்தைப் பரவச் செய்யும்." பாடல் வருமாறு:

" தொல்லை நான்மறை முதற்பெரும் கலையொலி துவன்றி

இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த மல்கு தண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும் செல்வம் ஓங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.'" செல்வம்-செல்வத்தைப் படைத்த மக்கள்; திணை மயக் கம். ஓங்கிய-உயர்ச்சியைப் பெற்று விளங்கிய, திரு-அழகிய,

பெ-18 - .