பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - பெரிய புராண விளக்கம்-5

மறையவர்-வேதியர்கள் வாழும்: ஒருமை பன்மை மயக்கம். செழும்-செழுமையைப் பெற்றவையாகிய, வினையாலணை யும் பெயர். பதிகள்-அந்தத் தொண்டை வளநாட்டில் உள்ள ஊர்கள். தொல்லை-பழையவை ஆகிய நான்மறை-இருக்கு. வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். என்னும் நான்கு வேதங்கள்; ஒருமை பன்மை மயக்கம். முதல்-முதலிய. பெரும்-பெருமையைப் பெற்ற கலை-சாத்தி, ரங்களை அந்தணர்கள் ஒதும்; ஒருமை பன்மை மயக்கம். ஒலி-இனிய நாதம். துவன்றி-பொருந்தி. இல்லறம்-இல்லற. வாழ்வை புரிந்து விரும்பி நடத்திக்கொண்டு. வேள்வியில்யாகங்களில் வளர்க்கும் தீயில்; ஆகு பெயர். ஆகுதி-நெய். சமித்துக்கள் முதலிய ஆகுதிகளால்; ஒருமை பன்மை மயக். கம். எழுந்த-எழுந்து தோன்றிய. மல்கு-மிகுதியாக உள்ள. தண்புகை-குளிர்ச்சியைப் பெற்ற புகை. மழை-மழையை. தரு-வழங்கும். முகில்-மேகங்களினுடைய ஒருமை பன்மை. மயக்கம்.குலம். கூட்டத்தை. பரப்பும்-பரவச் செய்யும்.

வேள்வியினால் மழை பெய்தல்: நான்மறை ஒதி: ஐவகை வேள்வி அமைத்தாறங்கம் முதலெழுத்தோதி வரன் முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம்." என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடி. அருளியதைக் காண்க.

பிறகு உள்ள 30-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தீங்குகள் போகும் வண்ணம் தீக்காவியாகும் அசுரனுக் குத் தலைவராகிய வல்லநாதேசுவரர் திருவருளை வழங்கிய தவமும், நல்லவினைகளாகிய புண்ணியச் செயல்களின் பய. னாக விருப்பம் மருவிய பெண்மணிகள் பிறந்த பரம்பரை யைப் பெற்ற வேதியர்கள் வாழும் திருவல்லம் என்னும் சிவத்தலம் விபூதி முதலிய சைவ சமயத்துக்கு உரிய சாதனங். களைப் பாதுகாத்த பொலிவினால் திகழ்வதும் அந்தத் திருவல்லம் ஆகும். பாடல் வருமாறு: -