பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 285

மாம ருங்குதண் ணிழலின் மருதயாழ் முரலும் காமர் தண்பனைப் புறத்தது கருங்கழி நெய்தல்." கரும்-தொண்டை வளநாட்டில் உள்ள கருமையான. கழி-நீர் நிறைந்த கழிகள்: ஒருமை பன்மை மயக்கம். நெய்தல் -இருக்கும் நெய்தல் நிலம். நெய்தல் நிலம்-கடற்கரையும் அதைச் சார்ந்த இடங்களும். - பூ-மலர்கள். மரும்-மேவும். புனல்-நீர்பாயும். அந்த மலர்களாவன: ச்ெந்தாமரை மலர், வெண்டாமரை மலர், நீலோற்பல மலர், குமுத மலர், அல்லி மலர், ஆம்பல் மலர், செங்கழுநீர் மலர் முதலியவை. வயல். -வயல்களாகிய களம்-ஏர்க்களங்களை ஒருமை பன்மை மயக் கம். பாடிய-புகழ்ந்து பாடிய, பொருநர்-தடாரிப்பறைகளை அடிக்கும் பொருநர்கள்: ஒருமை பன்மை மயக்கம், பொருநர் கள் ஏர்க்களம் பாடும் பொருநர், போர்க்களம் பாடும் பொரு தர் என்று இருவகைப்படுவர். அவர்களில் இங்கே கூறப் பெற்றவர்கள் ஏர்க்களம் பாடும் பொருநர்கள். தாம்-தாங் கள். அரும்-அருமையாக விளங்கும். கிளையுடன்-உறவினர். களோடு: திணை மயக்கம். தட-தடாகத்தில் மலர்ந்திருக்கும். மென்-மென்மையான. மலர்-மேலே கூறிய மலர்களை: ஒருமை பன்மை மயக்கம். மிலைந்து-அணிந்து கொண்டு. மாமாமரங்களினுடையஒருமை பன்மை மயக்கம்-மருங்கு-பக்கங் களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். தண்-குளிர்ச்சியைப் பெற்ற நிழலின்-நிழல்களில் தங்கிக்கொண்டிருந்து: ஒரும்ை. பன்மை மயக்கம். மருத யாழ்-மருத யாழ்களை ஒருமை. பன்மை மயக்கம். முரலும். மீட்டி வாசிக்கும். காமர்-அழகு. மருவிய விருப்பம் மருவிய' எனலும் ஆம். தண்-குளிர்ச்சி யைப் பெற்ற. பணை-வயல்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி, புறத்தது.வெளியில் இருந்து விளங்குவது.

அடுத்து உள்ள 34-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தத் த்ொண்டை வளநாட்டில் உள்ள பரிசுத்தமாகிய, வெண்மையான நீர் நிலைகளின் துறைகளில் அமர்ந்து. கொண்டு வலையர்கள் கட்டுபவை மீன்களைப் பிடிக்கும்.