பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 287

உப்பளத்தில் பணிகளைப் புரியும் பெண்மணிக ள். அளப்பனவிலைக்கு அளந்து வழங்குபவை. தரளம்-முத்துக்கள் ஒரும்ை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு: --- கொடுமையாக உள்ள செயல்களாகிய தொழில்களைப் புரியும் வலையர்கள் விலைக்கு வழங்குபவை கொழுத்த மீன் கள்; அந்தக் கடலின் பக்கத்தில் உள்ள மீணல்கள் பரவிய கரைகளில் வலையர் சாதிப் பெண்மணிகள் விலைக்கு அளந்து வழங்குபவை பவளங்கள், சகரர்களால் தோண்டப் பெற்ற சாகரத்தில் சங்குப் பூச்சிகளை அந்தத் துறைகளில் உள்ளவர்கள் முழுகுவார்கள்; அவ்வாறு முழு குபவர்களு டைய மாவடுக்களின் பிளப்புக்களைப்போல உள்ள கண் களைப் பெற்ற மனைவியர்களாகிய மங்கைப் பருவத்தை அடைந்த பெண்மணிகள் முழுகுபவை கடற்கரையில் உள்ள மணற்பரப்பில் தோண்டப் பெற்ற கிணறுகள். பாடல் வருமாறு: - .

' கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன .

- - - கொழுமீன்; படுமணற்கரை நூளைச்சியர் கொடுப்பன பவளம் தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன: அவர்தம் வடுவ கிர்க்கண் மங்கையர் குளிப்பன மணற்கேணி.” கொடு-கொடுமையாக உள்ள. வினை-செயல்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி, தொழில்-வேலைகளைப் புரியும்; ஒருமை பன்மை மயக்கம். நுளையர்கள்-வலையர் கள். கொடுப்பண-வழங்குபவை. கொழு-கொழுத்த, மீன்கடலில் உள்ள மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். படுமணல்: அந்தக் கடலின் பக்கத்தில் உள்ள மணல்கள் பரவிய. மணல்: ஒருமை பன்மை மயக்கம். கரை-கரைகளில்: ஒருமை பன்ம்ை . மயக்கம். நுளைச்சியர்-வலைச்சிகள். கொடுப்பன-விலைக்கு அளந்து வழங்குபவை. பவளம்-அந்தக் கடலில் தோன்ற்ய் பவளங்கள்: ஒருமை. பன்மை மயக்கம். தொடு-சகரர்கள்