பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 29 ÍF

களினுடைய வெள்ளை நிறத்தை மறைப்பவையாகிய அன் னப் பறவைகள் தாவிய கடல் துறையின் முன்னால் உள்ள இடத்தைச் சுற்றியுள்ள புலிநகக் கொன்றை மலர்களில் உள்ள மகரந்தப் பொடிகள். பாடல் வருமாறு:

காயல் வன்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுட் சேவ தண்ணறும் செழுமுகை செறியுமுண் டகங்கள்; ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னம் தாய முன்றுறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது." காயல்-உப்பங்கழிகளின் பக்கத்தில் உள்ள ஒருமை. பன்மை மயக்கம். வன்-வலிமையை உடைய. கரை-கரை களில் உள்ள: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புரை-குற்ற: மான. நெறி-வழிகளை; ஒருமை பன்மை மயக்கம். அடைப் பன-அடைப்பவை. கனி-மென்மையான. முள்-முட்கள் பொருந்திய, ஒருமை பன்மை மயக்கம். சேய-சிவந்த, தண்குளிர்ச்சியைப் பெற்ற, நறும்-நறுமணம் கமழும். செழுசெழிப்பைப் பெற்ற. முகை-அரும்புகள்: ஒருமை பன்மை மயக்கம். செறியும்-நெருங்கியிருக்கும். முண்ட கங்கள். தாம ரை மலர்கள். ஆய-அந்த இடத்தில் அமைந்த. நுண்-நுட்ப ம்ான. மணல்-மணல்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். வெண்மையை-வெள்ளை நிறத்தை. மறைப்பின-மறைப் பவையாகிய, அன்னம்-அன்னப் பறவைகள்; ஒருமை பன்மை. மயக்கம்.தாய-தாவிய பரவிய' எனலும் ஆம். முன்துறைகடல் துறையின் முன்னால் உள்ள ச்: சந்தி, சூழல்-இடத்தை. சூழ்-சுற்றி வளர்ந்து நிற்கும். ஞாழலின்-புலி நக்க் கொன்றை. மலர்களில் உள்ள; ஆகு பெயர். தாது-மகரந்தப் பொடிகள்: ஒருமை பன்மை மயக்கம். மரகந்தப் பொடி கள் மணல்களினு னுடைய வெள்ளை நிறத்தை மறைக்கும் என்பது கருத்து.

அடுத்து வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தாவி வரும் பெரியவையாக இருக்கும் அலைகள் வீசும். கடற்பரப்புக்கு முன்னால் குடிமக்கள் வாழும் ஊர்களில்