பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பெரிய புராண விளக்கம்-5

உழும் ஏர்களை ஒருமை பன்மை மயக்கம். நிகர்ப்பவுமாய். ஒத்து விளங்குபவைகளுமாகி. அலை-அலைகள் வீசும்: ஒருமை பன்மை மயக்கம். புனல்-நீர் பாயும். பணை-வயல் களைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். குறிஞ்சியோடு. குறிஞ்சி நிலத்தோடு. அணைவன-சேர்ந்திருக்ரும் ஊர்கள். அனேகம்-பல ஆகும்.

பிறகு வரும் 43-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு சேர்ந்துள்ள பசுமாடுகளினுடைய வரிசை மேயும் முல்லை நிலமாகிய காட்டில் சிறிய உருவத்தைப் பெற்ற முயல் மலையின்மேல் வந்து தவழ்ந்த ஆகாயத்தில் உலாவும் சங்திரனிடத்தில் உள்ள கறையாகிய முயலைத் தன்னுடைய சாதி என்று எண்ணி அதைச் சேர்ந்து திரு மணத்தை மேற்கொள்ளும் கொல்லை நிலத்தில் வரகுக்க திர் களை அடுக்கி வைத்துள்ள போரில் மலையின்மேல் தவழும் மேகங்கள் அபிடேகம் செய்யும் இடத்தோடு சேர்ந்து முல்லை நிலமாகிய காடும், குறிஞ்சி நிலமும் எல்லா இடங்களிலும் கலந்து தோன்றுபவையாக விளங்கும். பாடல் வருமாறு:

புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின் அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து மணம்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன

- வரைககாா இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.' புணர்ந்த-அவ்வாறு சேர்ந்துள்ள. ஆன்-பசுமாடுகளினு டைய ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசை. ப்:சந்தி. புறவிடை-முல்லை நிலமாகிய காட்டில். க், சந்தி. குறு முயல்சிறிய உருவத்தைப் பெற்ற முயல். பொருப்பின்-மலையின் மேல் வந்து. அணைந்த-சேர்ந்து தவழ்ந்த வான்-ஆகாபத் தில் உலாவும். மதி-சந்திரனிடத்தில் உள்ள முயலிை எ-கறை யாகிய முயலை, இனம்-தன்னுடைய சாதி. என-என்று எண்ணி இடைக்குறை. அணைந்து-அதைச் சேர்ந்து. மணம்-திருமணத்தை. கொள்-மேற்கொள்ளும். தொல்லை