பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 303

ஆயில்-கொல்லை நிலத்தில். வரகு-வரகுக்கதிர்களை அடுக்கி வைத்துள்ள ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். போர்போரில், வரை-மலையின் மேல் தவழும். க்:சந்தி. கார்மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம் மஞ்சன-அபிடேகம் செய்யும். இணைந்து-இடத்தோடு சேர்ந்து. முல்லையும்முல்லை நிலமாகிய காடும். குறிஞ்சியும்-குறிஞ்சி நிலமும். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம், கலப்பன-கலந்து விளங்கும்.

பிறகு வரும் 44-ஆம் பாடலின் கருத்து வருமாறு: “தாங்கள் உப்பங்கழிகளில் பிடித்துக்கொண்டு வரும் அமீன்களினுடைய குவியலைக் காட்டில் வாழும் வேடர்களுக்கு வழங்கி கவுதாரியையும் ஆண்கோழியையும் விலைக்கு விற்றும் சிறிய உப்பங்கழிகளின் பக்கத்தில் வாழும் வலைச்சியர்கள் அவரைக்காய்களுக்கும் தினை நெற்களுக்கும் வேட்டுவச் சாதிப் பெண்கள் பவளத்தையும் முத்துக்களையும் விலைக்கு அளந்து கொடுத்தும் உப்புநீர் நிரம்பிய கடற்கரைப்பக்கத் தைச் சார்ந்திருக்கும் நெய்தல் நிலமும் காடும் கலந்து விளங்கு 'பவை அந்தத் தொண்டை நாட்டில் நடக்கும் செயல்கள் ஆகும். பாடல் வருமாறு:

கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச் சிவலும் சேவலும் மாறியும் சிறுகழிச் சியர்கள் அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளங்தும் உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.' கழியவர் கவரும் தாங்கள் உப்பங்கழிகளில் பிடித்துக் கொண்டு வரும். மீன்-மீன்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம், குவை-குவியலை. கானவர்க்கு-காட்டில் வாழும் வேடர்களுக்கு, ஒருமை பன்மை மயக்கம். அளித்து-வழங்கி. ச்:சந்தி. சிவலும்-கவுதாரியையும். சேவலும்-ஆண்கோழியை யும். மாறியும்-விலைக்கு விற்றும். சிறு-சிறிய. கழிச்சியர்கள்உப்பங்கழிகளின் பக்கத்தில் வாழும் வலைச்சியர்கள். அவரை-அவரைக் காய்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம்.