பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பெரிய புராண விளக்கம்-5

எவ்வுல கங்களும் உள்ளதென்றி யாவரும் ஏத்தும் கைவிளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்." இவ்வளம்-இத்தகைய வளங்களை ஒருமை பன்மை மயக்கம். தரு-வழங்கும். பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திரு-அழகிய நாட்டிடை-தொண்டை வளநாட் டில். என்னும்-எல்லாக் காலத்திலும். மெய்-உண்மையாகிய, உண்மையையே பேசும்’ எனலும் ஆம். வளம்-வளங்களை; ஒருமை பன்மை மயக்கம். தரு-அளிக்கும். சிறப்பினால்-சிறப் பைப் பெற்றிருப்பதனால், உலகு-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்: இட ஆகுபெயர். எல்ாம்-எல்லோரும்; இடைக்குறை. வியப்ப-ஆச்சரியத்தை அடையும் வண்ணம். எவ்வுலகங்களும் - எந்த வகையாகிய உலகங்களிலும். உள்ளது-இருக்கின்றது. என்று-என. இ:குற்றியலிகரம். யாவரும்-எல்லா மக்களும். ஏத்தும். துதித்து வணங்கும். கை-நல்லொழுக்கம். விளங்கிய விளக்கத்தை அடைந்த. நிலையது-நிலையைப் பெற்று விளங்குவது. காஞ்சி மாநகரம்காஞ்சீபுரம் என்னு பெரிய சிவத்தலம்.

காஞ்சீபுரம்: இது கச்சி ஏகம்பம் எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் ஏகாம்பர நாதர், ஏகாம்பரேசுவரர், பெரியகம்பர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் ஏலவாரி குழலி, காமாட்சி யம்மை என்பவை. தீர்த்தங்கள் சிவகங்கை, கம்பாநதி முதலிய பல தீர்த்தங்கள். தலவிருட்சம் மாமரம். பஞ்ச பூதத் தலங்களில் இது விருதுவித் தலம். காமாட்சி அம்மையார் ஏகாம்பரேசுவரரைப் பூசித்து முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தருளிய தலம் இது. சிதம்பரம் முதலிய சிவத்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று அந்தத் தலங்களில் திருப்பணி களைப் புரிந்துவிட்டு, ஒவ்வொரு சிவத்தலத்துக்கு ஒவ்வொரு திருவெண்பாவாக க்ஷேத்திரத் திருவெண்பா என்ற நூலைப் பாடியருளிய ஐயடிகள் காடவர் கோன் நாயனார் அரசாட்சி செய்து வாழ்ந்த தலம் இது. திருவொற்றியூரின் எல்லை