பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 315 - தின மாலை, படிக மாலை, மலர் மாலை முதலியவை. முலை யினாள்-கொங்கைகளைப்பெற்றவளாகிய காமாட்சி அம்மை. முலை: ஒருமை பன்மை மயக்கம். போற்ற-அவரை வாழ்த்தி 3).j GöðTsäfés, .

சிவபெருமான் ஆ க ம ங் க ைள அருளிச் செய்தது: அரன் ஆகமம் மிகக் கூறும்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த் தி நாயனாரும், மன்னுமா மலை மகேந்திரமதனிற். சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்.’’ என்று மாணிக்க வாசகரும், அஞ்சன மேனி அரிவையோர், பாகத்தின் அஞ்சொடிரு பத்து மூன்றுள ஆகமம், அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும், அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே., 'அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத் தெண் கோடிநூறாயிரம்., 'அண்ணல் அருளால் அருளும்

திவ்யாகமம்.", அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி, உரனாகி ஆகமம் ஓங்கி நின்றானே.”, நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.', 'பெற்ற நல்ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல் வீரம் உயர் சிந்தம் வாதுளம், மற்றல் வியாமளம் ஆகும் காலோத்தரம், துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.', 'அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்.”, 'செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும், அப்படி நல்கும் அருள் நந்தி." என்று சேக்கிழாரும் பாடியருளிய வற்றைக் காண்க.

போகமார்த்த பூண் முலையினாள்: போக மார்த்த பூண் முலையாள். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் பாடியருளியதைக் காண்க,

பிறகு வரும் 53-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தேவர்களுக்கு எல்லாம் முதல் தேவனாகிய ஏகாம்பரே சுவரனும் காமாட்சி அம்மை வேண்டிக் கொண்ட அந்த வேண்டுகோளைத் தம்முடைய திருவுள்ளத்தில் அங்கீகாரம் புரிந்தருளி, பாரத நாட்டில் தெற்குத் திசையில் விளங்கும் செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மிகுதியாகப் புரிந்த தவத்தின் பயனால் எல்லோரும் தன்னிடம் வந்து சேர்வது,