பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - - பெரிய புராண விளக்கம்-5

கொண்டு." என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'துடியேரிடு கிடைத் துய்மொழியார்.' என்று மாணிக்க வாசகரும், சதுடியிடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான்.' என்று சேக்கிழாரும், துடிகொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கையிற் றிளங் கொடி.’’ என்று திருமங்கை ஆழ்வாரும், துடிகொள் இடை மடத்தோழி., 'துடி நேரிடையும்.’’ என்று நம்மாழ்வாரும்,'துடிநடுவன்ன துளங் கிய நுசுப்பின்." (பெருங்கதை, 2. 15:56) என்ற கொங்கு வேளிரும், துடியிடைப்பணை முலைத் தோகையன்னவர்.' (நகரப் படலம், 37), துடிபுக்காவிடைத் திருமகள்.'" (வரைக் காட்சிப் படலம், 12), கொம்பர்கள் குயிலாய் உன் துடிபுரை இடை நாணித் துவள்வனஅவைகாணாய்."(வனம் புகு படலம், 16), துடியினேரிடை தோன்றவளா மெனின். ' (அயோமுகிப் படலம்,23) , துடியிடை அடையாளத்தின் தொடர்வை தொடர்தி என்னா, (உருக்காட்டு படலம்,38), என்று கம்பர் பாடியவற்றையும் காண்க.

அடுத்து உள்ள 21-ஆம் பாடலின் கருத்து வருமாறு: என அந்தத் தாயனார் வணக்கங்களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய இடபவாகனத்தின் மேல் எழுந்தருள் பவராகிக் காட்சி அளித்து, "நீ செய்த செயல் நன்றாக இருக்கிறது; நீ நல்ல நெற்றியைப் பெற்ற உன்னுடைய பத்தினியோடு சேர வந்து எல்லாக் காலத்திலும் நம்மு டைய சிவலோகத்தில் வாழ்வாயாக’’ என்று கூற அந்தத் தாயனார் அவருடனே செல்ல சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் ஐயராகிய நடராஜப் பெருமானார் தம்மு டைய இளம்பருவத்தைப் பெற்ற இடபவாகனத்தை ஒட்டிக் கொண்டு சிதம்பரத்திற்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு: - . . -

' என்றவர் போற்றி செய்ய இடபவா கனராய்த் தோன்றி

நன்று.ே புரிந்த செய்கை, கன்னுத லுடனே கூட