பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 317

பூசையை. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. செய்வாய்-புரி வாயாக. என்று-என. ஏவ-கட்டளையிட. எம்பெருமாட்டியும் -அடியேங்களுடைய தலைவியாகிய காமாட்சி அம்மையும். அடியேங்கள் என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர் களையும் சேர்த்துக் கூறியது. பிரியா-ஏகாம்பரேசுவரரைப் பிரிய முடியாத இசைவு-சம்மதத்தை கொண்டு-மேற் கொண்டு. எழுந்தருளுதற்கு-காஞ்சிபுரத்திற்குச் சென்றருளு வதற்கு. இசைந்தாள்-உடம்பட்டாள்.

பிறகு வரும் 54-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "குற்றம் இல்லாத பலவகை யோனிகளாகிய எண்பத்து நான்கு லட்சங்களாகிய உயிர்களுக்குள் அமைத்து வைத்த வேறுபாடுகளையும் பாதுகாத்தருளும் அந்தக் கருணையைப் பெற்ற தலைவனாகிய ஏகாம்பரேசுவரன் திருவாய் மலர்ந் தருளிச் செய்த சைவ ஆகமத்தின் வழியில் விரும்பி அந்தக் காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளும் இயல்பினால் காமாட்சி யம்மை ஏகாம்பரேசுவரரை வணங்கிவிட்டு எழுந்தருள இமய மலைக்கு அரசனும் விருப்பத்தோடு காஞ்சீபுரத்துக்கு வந்து சேர்ந்து பெரிய தவத்தைச் செய்தருளுவதற்குப் பொருத்த மாக உள்ள படைகளோடும் தன்னுடைய பரிவார மக்களைக் காஞ்சி புரத்திற்கு அனுப்பினான். பாடல் வருமாறு:

  • ஏதம் இல்பல யோனிளண் பத்து நான்கு

நூறாயிரங் தனுள் வைத்த பேத மும்புரங் தருளும்அக் கருணைப்

பிரான் மொழிந்தஆகமவழி பேணிப் போதும் நீர்மையில் தொழுதனள் போதப்

பொருப்பில் வேந்தனும் விருப்பில்வங் தெய்தி மாத வம்புரிந் தருளுதற் கமைந்த

வளத்தொடும் பரி சனங்களை விடுத்தான்.' ஏதம்-குற்றம். இல்-இல்லாத கடைக்குறை. பல-பல வகை. யோனி-யோனிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம்,

எண்பத்து நான்கு நூறாயிரந்தனுள்-எண்பத்து நான்கு லட்.